சூரியன் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளும் விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சூரியனின் ஒரு துண்டு பகுதி வெடித்து உடைந்ததாக செய்திகள் வெளியாகின. மேலும் ஜேம்ப் வெப் தொலைநோக்கி மூலம் இது தெரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டன. உண்மையில் சூரியனில் என்ன நடந்தது என்பது குறித்து பார்ப்போம். விஞ்ஞான் பிரசார் அமைப்பின் அறிவியலாளர் முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
சூரியனின் '3217' என்று சொல்லப்படுகிறது ஒரு பகுதி சூரிய சீற்றம் (பிழம்பு) ஏற்பட்டது. பிப்ரவரி 11ஆம் தேதி இரவு 9.18 மணியளவில் சீற்றம் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட மின்காந்த அலை ஒரு புயல் போல் பூமியை நோக்கி வந்தது. இது பூமியின் தென் ஆப்ரிக்கா பகுதியில் தாக்கியது. அப்போது அந்த பகுதியில் சிற்றலை பாதிப்பு ஏற்பட்டது. அதனால் இது பரபரப்பாக பேசப்பட்டது. அன்றைக்கு மட்டும் 15 சூரிய சீற்றம் ஏற்பட்டது. இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இது பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இது ABC வகை மென்மையானது. M க்ளாஸ் நடுத்தரமானது சிறு பாதிப்புகளை மட்டும் ஏற்படுத்தும். x க்ளாஸ் மட்டும் தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். இதில் அன்றைக்கு ஏற்பட்ட 15 சீற்றத்தில் 1 மட்டுமே x க்ளாஸ் ஆகும். சூரியன் சீறிய 8 நிமிடத்தில் பூமியில் தாக்கம் ஏற்பட்டது.
எனினும் இது மக்களுக்கும், உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது. விண்வெளியில் செயற்கைக் கோள்களை பாதிக்கலாம். இந்த அததீவிர மின் காந்த அலைகள் விண்கலத்தின் மீது மோதினால் செயற்கைக் கோள் பழுதாக வாய்ப்புள்ளது. அதேபோல் விண்வெளியில் இருக்கும் வீரர்கள் ஸ்போக் வாக் செல்ல மாட்டார்கள்.
பூமியைப் பொறுத்தவரை அதுவும் தீவிரமாக இருந்தால் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் ட்ரிப் ஆகலாம். எனவே மின்தடைஏற்படலாம்.
அதேபோல் சூரியனின் இயக்கம் என்பது 11 ஆண்டுகள் ஊசல் என வெங்கடேஸ்வரன் கூறுகிறார். இப்போது உயரத்தில் இருக்கிறோம். 2020-ம் ஆண்டு ஊசல் தொடங்கியது. அப்போது குறைவான நிலையில் இருந்தது. 2024, 2024-இல் உச்சத்தை அடையும். 2032 மீண்டும் குறைந்து தாழ்நிலைக்கு சென்றுவிடும் என்றார்.
நாம் உச்சத்துக்கு மிக அருகில் இருக்கிறோம். இதனால் சூரியப் புள்ளிகள் அதிகரிக்கும். அடுத்த வரக்கூடிய பல மாதம் இம்மாதிரியான செய்திகளை நாம் அதிகளவில் பார்க்கலாம். எனினும் மனிதர்கள், உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/