Advertisment

சோயுஸ் விண்கலத்தில் கசிவு: ரஷ்ய விண்வெளி வீரர்களை மீட்க திட்டம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்ட நிலையில், அதிலுள்ள 3 வீரர்களை மீட்க திட்டமிடப்பட்டு வருகிறது.

author-image
sangavi ramasamy
New Update
சோயுஸ் விண்கலத்தில் கசிவு:  ரஷ்ய விண்வெளி வீரர்களை மீட்க திட்டம்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்தாண்டு செம்டம்பர் மாதம் ரஷ்யாவின் 3 வீரர்களுடன் சோயுஸ் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 14-ம் தேதி வீரர்கள் விண்வெளி நடைப்பயணம் மேற்கொள்ள இருந்தது. தொடர்ந்து
விண்கலத்தில் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வீரர்களின் நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில், மாஸ்கோ தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான மீட்பு நடவடிக்கையை பரிசீலித்து வருகிறது. ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் 3 விண்வெளி வீரர்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வர ஒரு வெற்று விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

ரோஸ்கோஸ்மோஸ் மற்றும் நாசா அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், சோயுஸ் விண்கலத்தில் கசிவுக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தனர். ரஷ்யா வீரர்கள் எவ்வாறு மீட்கப்பட உள்ளனர் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனக் கூறினர்.

இந்நிலையில், ரஷ்யா சோயுஸ் விண்கலத்தின் அடுத்த திட்டமான Soyuz MS-23 ஏவுதலுக்கான பணிகளையும் விரைவுபடுத்தி வருகிறது. ரஷ்ய விண்வெளி வீரர்கள் செர்ஜி ப்ரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் சோயுஸ் எம்எஸ்-22 விண்கலத்தில் ISS சென்றனர். அமெரிக்கா - ரஷ்யா ஒப்பந்தத்தின் படி இரு நாட்டு வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். சோயுஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்ட நிலையிலும் வீரர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என ரஷ்யா மற்றும் நாசா தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment