அமெரிக்க தொழிலதிபர், ரய்யானா பர்னாவி, நாசா வீரர்கள் உள்பட 4 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ்ஸின் ஆக்ஸியம் மிஷன்-2 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஓய்வுபெற்ற நாசா விண்வெளி வீரர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பர்னாவி உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு இன்று (திங்கட்கிழமை) காலை விண்வெளி நிலையத்தை அடைக்கின்றனர். அதைத் தொடர்ந்து குழு அங்கு 1 வார காலம் தங்கி ஆய்வு செய்து மீண்டும் அமெரிக்கா திரும்புகின்றனர். புளோரிடா கடற்கரையில் அவர்கள் தரையிறங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள முதல் சவுதி அரேபியா பெண்ணான பர்னாவி, அங்கு ஸ்டெம் செல் குறித்தான ஆராய்ச்சியை மேற்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் அவருடன் ராயல் சவுதி விமானப்படையின் போர் விமானி அலி அல்-கர்னியும் சென்றுள்ளார்.
1985-ம் ஆண்டுக்கு பிறகு சவுதி அரேபியா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செலுத்திய முதல் ராக்கெட் இதுவாகும். 1985-ம் ஆண்டு சவுதி இளவரசர், டிஸ்கவரி விண்கலத்தில் விண்வெளிக்கு சென்ற பிறகு ஏவப்படும் முதல் ராக்கெட் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“