எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நாளை (ஜூலை 27) வியாழக்கிழமை ஃபால்கன் ஹெவி ராக்கெட் (Falcon Heavy launch vehicle) மூலம் உலகின் மிகப்பெரிய தனியார் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஹியூஸிஸ் ஜூபிடர் 3-ஐ (Hughes' Jupiter 3) விண்ணில் செலுத்த உள்ளது. ஜூபிடர் 3 செயற்கைக் கோள் வட மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஃபால்கன் ஹெவி ராக்கெட், ஜூபிடர் 3 செயற்கைக்கோளை சுமந்து செல்லும். புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ்-39A-ல் இருந்து இந்திய நேரப்படி நாளை காலை 8.34 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது. ஸ்பேஸ்எக்ஸ்ஸின் பால்கன் ஹெவி அதிக பேலோட்டை சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சிஸ்டம் உருவாக்கப்பட்டு தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது, இது அனைத்தையும் விட மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
நாளை ஏவப்படும் செய்ற்கைக் கோள் ஏற்கனவே அனுப்பபட்ட ஜூபிடர் செயற்கைக் கோளுடன் இணைந்து செயல்படும். அதன் தற்போதைய திறனை 500 ஜிபிபிஎஸ் ஆக இரட்டிப்பாக்கும்.
இது ஹியூஸின் தற்போதைய ஜூபிடர் செயற்கைக் கோள் வலையமைப்பில் சேரும், அதன் தற்போதைய இது அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள HughesNet வாடிக்கையாளர்களுக்கு 100 Mbps வேகத்தில் பிராட்பேண்டை அணுக உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“