ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 6,600 கிலோமீட்டர்கள் (4,000 மைல்) தொலைவில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஒரு தீபகற்பம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 30 ஆக்டிவ் எரிமலைகள் உள்ளன. உலக நாடுகள் எப்போதும் உன்னித்து கவனிக்க கூடிய பகுதியாக உள்ளது. புவிவெப்பச் செயல்பாட்டில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் உன்னித்து கவனிக்கப்படுகிறது.
சனிக்கிழமையன்று ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த திடீர் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ரஷ்ய அறிவியல் அகாடமியின் வல்கனாலஜி நிறுவனம் கூறுகையில், கிளுசெவ்ஸ்காயா சோப்கா, யூரேசியாவின் மிக உயரமான ஆக்டிவ் எரிமலை ஒரு மணி நேரத்திற்கு கிட்டதிட்ட 10 வெடிப்புகள் பதிவு செய்துள்ளது. இந்த எரிமலை 4,754 மீட்டர்கள் (கிட்டத்தட்ட 16,000 அடிகள்) உயரம் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ஷிவேலுச் எரிமலையில் இருந்தும் எரிமலைக் குழம்புகள் மற்றும் சாம்பல் உமிழ்ந்து வருவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. கம்சட்கா மக்கள்தொகை குறைவாக உள்ள நகரம்.
அதேசமயம் க்ளூச்சி நகரம் 5,000 மக்களை கொண்டுள்ளது. இது 2 எரிமலைகளுக்கும் இடையே ஒவ்வொன்றிலிருந்தும் 30-50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மேலும், எரிமலைகள் தீபகற்பத்தின் ஒரே பெரிய நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளது. பசிபிக் பகுதியில் உள்ள எரிமலைகளை ரிங் ஆப் பயர் என்று குறிப்பிடப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”