scorecardresearch

சிறுகோள் உங்கள் நகரத்தைத் தாக்கினால் என்ன நடக்கும்? இந்த ஆப்-பில் விளையாடி தெரிஞ்சுகோங்க.. புதிய கண்டுபிடிப்பு

Asteroid: ஒரு சிறுகோள் பூமியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தாக்கினால் என்ன நடக்கும் என்பதைப் அறிந்து கொள்ள நீல் அகர்வால் Asteroid Launcher web app என்ற செயலியை உருவாக்கியுள்ளார்.

சிறுகோள் உங்கள் நகரத்தைத் தாக்கினால் என்ன நடக்கும்? இந்த ஆப்-பில் விளையாடி தெரிஞ்சுகோங்க.. புதிய கண்டுபிடிப்பு

சிறுகோளானது (Asteroid) நாம் வகிக்கும் இடத்தை தாக்கினால் என்னவாகும் என்பதை பற்றி நாம் யோசித்து இருப்போம். பல கற்பனைகள் செய்திருப்போம். டைனோசர் இனம் சிறுகோள் தாக்கத்தால் அழிந்துபோனதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு சிறுகோள் பூமியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தாக்கினால் என்ன நடக்கும் என்பதைப் அறிந்து கொள்ள நீல் அகர்வால் என்பவர் Asteroid Launcher web app என்ற செயலியை உருவாக்கியுள்ளார்.

Asteroid Launcher என்ற வெப் ஆப் பூமி பகுதியில் சிறுகோள் தாக்கினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை அறிய உதவுகிறது. இது ப்ரோக்ராமர் நீல் அகர்வால் என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர் “தி டீப் சீ” போன்ற பிற ஆன்லைன் பயன்பாடுகளையும் உருவாக்கியுள்ளார். இது கடலின் வெவ்வேறு பகுதிகளில் ஆழமான பகுதிகளில்
என்ன வகையான உயிரினங்களை சந்திக்கலாம் என்பதை பயனர்கள் கற்பனை செய்ய உதவும் ஒரு செயலி மற்றும் அவரின் ‘Spend Bill Gate’s Money’ என்ற செயலி மூலம் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதை மக்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமாம்.

Asteroid Launcher-யை எவ்வாறு பயன்படுத்துவது?

Asteroid Launcher பயன்படுத்த முதலில் neal.fun/asteroid-launcher என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு உலக வரைபடம் மற்றும் asteroid’s properties சிறுகோள் வகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்போது, சிறுகோள் தாக்குதலுக்கு உள்ளாகும் இடத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் asteroid’s properties சிறுகோள் அளவு, வேகம், கம்போசிசன், impact angle என எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்க வேண்டும். கடைசியாக “Launch Asteroid” பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதன் பின், ஆப் சிறுகோள் தாக்குதலின் விளைவுகளை மதிப்பிடும்.

எடுத்துக்காட்டாக, 45 டிகிரி கோணத்தில் நொடிக்கு 34 கிலோமீட்டர் வேகத்தில் புது டெல்லியைத் தாக்கும் 870 மீட்டர் அகலமுள்ள சிறுகோளை உருவகப்படுத்தினால், அது 254 ஜிகாடன் டிஎன்டியை வெளியிடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டாக, 45 டிகிரி கோணத்தில் நொடிக்கு 34 கிலோமீட்டர் வேகத்தில் புது டெல்லியைத் தாக்கும் 870 மீட்டர் அகலமுள்ள சிறுகோளை உருவகப்படுத்தினால், அது 254 ஜிகாடன் டிஎன்டியை வெளியிடும் தாக்கத்தை ஏற்படுத்தும். 22-கிலோமீட்டர் அகலமான பள்ளத்தை உருவாக்கும்.

DART விண்கலம்

இந்த ஆப் மிகவும் சுவாரஸ்யமாக, ரியலிஸ்டிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மையாகவே சிறுகோள் தாக்குவது போல் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் சிறுகோள் பற்றிய கவலை தேவை இல்லை. விஞ்ஞானிகள் அடுத்த நூறு ஆண்டுகள் பூமிக்கு அச்சுறுத்தும் ஏற்படும் வகையில் சிறுகோள் இல்லை என்று கூறுகின்றனர். இந்நிலையில், நாசா சிறுகோள் தாக்கி அழிக்கும் சோதனை முயற்சியிலும் ஈடுபட்டது. கடந்த செப்டம்பர் 2022 இல், சோதனை முயற்சியாக டிமார்போஸ் என்ற சிறுகோளை நாசாவின் DART விண்கலம் நேருக்கு நேர் வெற்றிகரமாக மோதி அழித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: This app lets you know what happens if an asteroid hits your city