செவ்வாய் கிரகத்தில் சுமார் 4 ஆண்டுகள் ஆய்வு செய்த நாசாவின் இன்சைட் லேண்டர் (InSight lander) அதன் பயணத்தை நிறைவு செய்கிறது. லேண்டரின் சோலார் பேனல்களில் அதிக அளவு தூசி படிந்துள்ளதால் விண்கலத்தின் மின் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் லேண்டர் செயலிழக்க கூடும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எஞ்சியிருக்கும் மின்சாரம் மற்றும் பிற கருவிகளின் உதவிகளுடன் தொடர்ந்து சிறிது காலம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேண்டரின் தரவுகள் சேகரிப்பு
இன்சைட் லேண்டர் செயலிழக்க செய்வது முன் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாசா தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்சைட் லேண்டர் இதுநாள் வரை சேமித்த தரவுகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும். லேண்டரில் உள்ள தரவுகள் சேமிக்கப்படும். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்படும்படி சேமிக்க வேண்டும். இன்சைட் லேண்டர் செவ்வாய் கிரகத்தின் உட்புற அடுக்குகள் (interior layers), அதன் திரவ மையம், செவ்வாய் கிரத்தின் வானிலை தரவுகள், செவ்வாய் கிரகத்தின் நிலநடுக்கம் பற்றிய தரவுகளை சேகரித்துள்ளது.
அனைத்து கருவிகளும் நிறுத்தி வைப்பு
இந்த ஆண்டின் தொடக்கத்தில், லேண்டரின் ஆற்றல் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதை திட்டக் குழு விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து seismometer கருவியை தொடர்ந்து இயக்க நாசா லேண்டரின் அனைத்து கருவிகளையும் நிறுத்தி வைத்தது.
நாசா விஞ்ஞானி புரூஸ் பேனர்ட் கூறுகையில், லேண்டர் இப்போது 20% குறைவாகவே மின்உற்பத்தி செய்கிறது. இதனால் லேண்டரின் மற்ற கருவிகளை திட்டக் குழுவால் இயக்க முடியவில்லை. மேலும் பேனல்களில் படிந்துள்ள அதிக அளவிலான தூசி இதை மேலும் மோசமடைய செய்தது. திட்டக் குழு seismometer கருவி நிறுத்திவைத்தது. அங்கு புயல் ஓய்ந்த பிறகு seismometer கருவி மீண்டும் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியது. இருப்பினும் லேண்டரில் குறைந்த அளவிலான மின்சாரம் மட்டும் இருப்பதால் சில வாரங்களுக்கு மட்டுமே செயல்படுத்த முடியும் என்று கூறினார்.
அதிகாரப்பூர்வ சான்றிதழ் (InSight’s death certificate)
செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் ஒரு விண்கலத்துடன் 2 தொடர்ச்சியான தொடர்புகளை லேண்டர் தவறவிட்டால், இன்சைட் பணி முடிந்ததாக நாசா அறிவிக்கும். அதன்பின், நாசாவின் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் லேண்டரின் சிக்னல்களை சிறிது நேரம் தொடர்ந்து கவனிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் லேண்டர் பேனலில் உள்ள தூசி பலத்த காற்று வீசினால் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் செயல்படுமா? எனக் கேட்கப்பட்தற்கு அத்தகைய நிகழ்வு கேள்விக்குறி, சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் கூறினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil