பிரிட்டன் வணிகர், பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான விண்வெளி சுற்றுலா நிறுவனமான 'விர்ஜின் கேலக்டிக்' இன்று இரவு தனது முதல் வணிக விண்வெளிப் பயணத்தை தொடங்குகிறது. முதல் சுற்றுலா சேவைக்கு 'கேலக்டிக் 01' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Advertisment
கேலக்டிக் 01 விமானம் இன்று (ஜூன் 29) இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இத்தாலிய விமானப்படை மற்றும் இத்தாலியின் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த 3 நபர்கள் இந்த விமானத்தில் விண்வெளி சுற்றுலா செய்ய உள்ளனர். 90-நிமிட விண்வெளி பயணத்தில் அங்கு அவர்கள் சப்-ஆர்பிட்டல் பகுதியில் அறிவியல் சோதனை மேற்கொள்ள உள்ளனர்.
விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தனது இணையதளத்திலும், யூடியூப் பக்கத்தில் விண்வெளிப் பயணத்தை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது. இரவு 8.30 மணி முதல் லைவ் ஸ்ட்ரீமிங் தொடங்கும். அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து விமானம் ஏவப்படுகிறது.
விர்ஜின் கேலக்டிக் 01 விமானத்தில் 3 இத்தாலியர்கள், ஒரு நிறுவன விமானப் பயிற்சியாளர் பயணம் செய்ய உள்ளனர்.
4 பேர் அடங்கிய குழு
கொலின் பென்னட் - விர்ஜின் கேலக்டிக் விண்வெளி இன்ஸ்ட்ரக்டாராக செயல்படுகிறார். மற்ற உறுப்பினர்கள் இத்தாலியின் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலில் பணிபுரியும் பொறியியலாளர் பாண்டலியோன் கார்லூசி, விர்ஜின் கேலக்டிக் விண்வெளி வீரர் கொலின் பென்னட், இத்தாலிய விமானப்படையின் கர்னல் வால்டர் வில்லடேய் மற்றும் இத்தாலிய விமானப்படையின் மருத்துவர் ஏஞ்சலோ லாண்டோல்ஃபி ஆகியோர் பயணம் செய்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“