நமது சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் மற்றும் அதன் துணைக் கோளை ஆய்வு செய்து அங்கு மனிதர்கள் உயிர் வாழ முடியுமா என்பது ஆய்வு செய்யப்பட இருக்கிறது. DW Tamil யூடியூப் பக்கத்தில் இதுகுறித்து தகவல் கூறப்பட்டுள்ளது.
Advertisment
வியாழனை கோளை (Jupiter) சுற்றி வரும் நிலவுகளில் உயிர் வாழ முடியுமா? இதனை கண்டறியும் பணியில் வியாழனின் துணை கோள்களை ஆய்வு செய்ய உள்ள ஜூஸ் (JUICE) விண்கலம் விரைவில் ஈடுபட உள்ளது. நமது சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனை இந்த விண்கலம் சென்றடைய எட்டு ஆண்டுகள் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மன் விண்வெளி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வியாழனை சுற்றி வரும் 3 மர்மமான பணிசூழ்ந்த நிலவுகளில் தங்களின் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
டி.எல்.ஆர் விண்கோள் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த கன்னா போர்டியான்கினா கூறுகையில், "இந்த நிலவுகளில் உயிரினங்கள் வாழ முடியுமா என்பது தான் முக்கியமான கேள்வி.
இவை தமது உட்புறத்தில் பணி நிறைந்த கடல்களை கொண்டுள்ளன. எனவே, கடல் இருப்பதற்கான சாத்தியகூறுகள் உள்ளன. வேற்றுகிரக வாழ்க்கை தொடர்பான ஆய்வில் 3 நிலவுகளில் சிறிய நிலவான இரோப்பா தான் ஆராய்ச்சியின் மையப் புள்ளி" என்று கூறினார்.
Advertisment
Advertisements
இதன் பணி போர்திய மேற்பரப்பின் கீழ் பெருங்கடல் ஒன்று உள்ளது. வியாழனின் மற்ற 2 கோள்கைளையும் JUICE விண்கலம் ஆய்வு செய்யும். மிகப் பெரிய நிலவான கேனின் மீனின் சுற்று வட்டப் பாதையில் விண்கலம் நுழைய 3 ஆண்டுகள் ஆகும். பெர்ஜினில் உருவாக்கப்பட்ட ஒரு கருவி லேசர் துடிப்புகளைப் பயன்படுத்தி மேற்பரப்பை அளவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஹவுக் ஹஸ்மேன் (டி.எல்.ஆர் விண்கோள் ஆய்வு நிறுவனம்) கூறுகையில், "ஜூஸ் விண்கலத்தின் உதவியுடன் அங்கு ஏற்கனவே உயிரினங்கள் இருந்ததா என்பதை ஆராய உள்ளோம். மேலும் வியாழனின் நிலவுகளில் எந்த இடத்தில் உயிரினங்கள் வாழ்ந்தன என்ற ஆதாரங்களையும் நாங்கள் தேட உள்ளோம். இவை விண்கலத்தின் அடுத்தடுத்த பணிகளாக இருக்கும்" என்று கூறினார்.
வியாழன் நிலவுகளில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளுக்கான தடையங்கள் கண்டறிந்தால் எதிர்காலத்தில் அனுப்பபடும் விண்கலன்கள் மேலும் பலவற்றை கண்டறியலாம். வேற்றுகிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான கால கட்டம் விரைவில் வருமா? ஜூஸ் விண்கலத்தின் ஆய்வு மிகப் பெரிய எதிர்பார்பபை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“