கிட்டத்திட்ட 100 வருடங்கள் முன்பு மேற்கு உலக நாடுகளில் உள்ள நிறுவனங்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டன. தேவையான அனைத்து பொருட்களுமே மக்களிடம் இருந்ததால் நுகர்வு குறைந்தது. எனவே நிறுவனங்கள் ஒரு சிறந்த யோசனையை முன் வைத்தன. இன்னும் நிறைய பொருட்கள் வேண்டும் என்றும் தேவையற்ற பொருட்கள் கூட அவர்களுக்கு தேவை தான் என்றும் மக்களை நம்ப வைப்பது தான் அந்த யோசனை.
உங்களை இன்னும் நிறைய பொருட்கள் வாங்க வைப்பதற்கு நிறுவனங்கள் உங்கள் மூளையை ஆராய்ச்சி செய்கின்றன. இதற்குப் பெயர்தான் நியூரோ மார்க்கெட்டிங். இது ஒரு சக்தி வாய்ந்த மார்க்கெட்டிங் முறை. நம்மை பற்றி நமக்கு தெரிந்ததை விட நிறுவனங்களுக்கு அதிகம் தெரியும். நுகர்வோரின் மூளையைத் தவிர அந்த பிராண்ட் வேறு எங்கும் இருக்காது. நியூரோ மார்க்கெட்டிங், ஒரு சக்தி வாய்ந்த மார்க்கெட்டிங் முறை. பெரும்பாலும் நம்மால்கூட அணுக முடியாத ஒரு விஷயத்தை அது நிறுவனங்களிடம் தருகிறது, அதுதான் நம் ஆழ்மனம். இதுகுறித்து DW Tamil வீடியோ வெளியிட்டுள்ளது.
1950களில் வியத்தகு சோதனை மூலம் ஒரு மார்க்கெட்டிங் வல்லுநர் உலகை அதிர்ச்சியடைய செய்தார். கோகோகோலா குடியுங்கள். பாப்கார்ன் சாப்பிடுங்கள் என்ற செய்தியை சினிமா திரைகளில் ஒரு சில விநாடிகள் மட்டும் திரையிட வைத்தார். இது மக்களின் கவனத்தை ஈர்க்க பலரும் கோகோகோலா, பாப்கார்ன் வாங்கி திரண்டார்கள்.
இது உண்மை தான். ஆனால் நல்ல வேளை நம்மை மூளைச் சலவை செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. பிரின்ஸ் கூமன், மார்க்கெட்டிங் துறையைச் சேர்ந்தவர். மேட் ஜான்சன் நரம்பு சார் அறிவியலாளர் நம் மூளைக்கு ஏற்றவாறு எவ்வாறு மார்க்கெட்டிங் செய்கின்றன என்ற புத்தகத்தை எழுதினர். அவர் உருவாக்கிய கட்டுக் கதை என்று தெரிந்து போனது. மூளையில் பொருள் வாங்கும் பட்டன் என்று ஒன்று கிடையாது.
நல்ல விஷயம் என்னவென்றால் நாம் சிந்திக்காமல் பொருள் வாங்குவது இல்லை. நாம் பல முடிவுகளை ஆழ்மனதில் தான் எடுக்கிறோம். இங்கு தான் நியூரோ மார்க்கெட்டிங் வருகிறது. நம் மூளை எப்படி வேலை செய்கிறது. நமக்கு என்ன தேவை என்று புரிந்து கொள்ள நிறுவனங்கள் முயற்சி செய்கிறது. பொதுவாக மார்க்கெட்டிங் ஆராய்ச்சி இப்படி தான் இருக்கும். ஆப்பிள் வேண்டுமா, சாக்லேட் வேண்டுமா என கேட்டால் ஆப்பிள் வேண்டும் என்று சொல்வேன். ஆனால் உண்மையில் எனக்கு ஆப்பிள் தான் வேண்டுமா? நம்மை நாம் தான் கட்டுப்படுத்துகிறோம். நாம் தான் யோசித்து முடிவு எடுக்கிறோம். இதை பகுத்தறிவு என்று கூறுகிறோம்.
ஆனால் சில நேரங்களில் நாம் யோசனை இல்லாதவர்கள் என்றும் ஒரு செயலின் முடிவுகளை எடுக்க முடியாதவர்கள் என்றும் பல தரப்பட்ட காரணிகள் அதிகம் தெரியாது என்றும் பல ஆய்வுகள் காட்டுகின்றன. சுருக்கமாக நமக்கு என்ன வேண்டும் என்றும் எப்போதும் நமக்கு தெரிந்து விடாது. ஆனால் நமது மூளை பொய் சொல்வது இல்லை.
அதனால் தான் நியூரோ மார்க்கெட்டிங் செய்பவர்கள் நுகர்வோரின் மூளையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தங்களது ஆய்வில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள். Functional MRI, Electo insofo gram மூலம் மூளை செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது.
கண்களை டிராக் செய்வதன் மூலம் நாம் எந்த பக்கம் கவனிக்கிறோம் என்று தெரியும். இதய துடிப்பு விகிதம், தோல் கடத்தல் போன்றவற்றை கண்காணிப்பதன் மூலம் எது அவர்களை ஊக்கப்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
உமா கர்மார்கர் நரம்பியல் விஞ்ஞானி நல்லதோ, கெட்டதோ மனிதர்கள் சிக்கலானவர்கள். நமது மூளையும் சிக்கலானது. நாம் எப்படி முடிவுகளை எடுக்கிறோம் என்பதைப் பற்றி உமா
உமா கர்மார்கர் ஆராய்ச்சி செய்து வருகிறார். நரம்பியல் (நியூரோ சயன்ஸ்) என்ன செய்கிறது என்றால் இந்த உணவுச் சார் கூறுகள் அல்லது முழுமையான அணுக முடியாதவற்றை அணுக முயற்சி செய்கிறது. மக்களின் தேர்வுகளில் முடிவுகளில் பங்கு வகிக்கிறது. கூடுதல் தகவல்களை வழங்குகிறது.
உதாரணமாக சீட்டோஸ் (Cheetos) எடுத்துக் கொள்வோம். அதன் தாய் நிறுவனமான வ்றீட்டோ லே, நுகர்வோரிடம் தங்களது தயாரிப்பு பற்றி கேட்ட போது, அது குழந்தைகளின் திண்பன்டம் என பலர் கூறினர். அவர்களின் மூளைளை ஆராய்ந்த போது அவர்களின் கைகளில் ஒட்டிக் கொள்ளும் ஆரஞ்சு தூள் அவர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது என்று தெரிய வந்தது. இது வேடிக்கையாக இருக்கிறது.
விரலில் ஆரஞ்சு தூள் படுவதில் ஒரு கிளர்ச்சி இருக்கிறது. அது விநோதமாக இருந்தது. மக்கள் அதை ரசித்தனர்.
இதை எடுத்துக் கொண்ட வ்றீட்டோ நிறுவனம் இந்த ஆய்வை வைத்தே விளம்பரம் தயாரித்தது. அது பெரும் வெற்றியாக அமைந்தது. இந்த மாதிரியான ஆராய்ச்சியில் பல நிறுவனங்கள் இறங்கின. பெரும்பான்மை ரகசியமாக நடக்கின்றன.
நரம்பு சார் அறிவியல் மூலமாகவும், உளவியல் நடத்தை சார் பொருளாதார மூலமாவும் நம்மை எது இயக்குகிறது என புரிந்து கொள்கிறார்கள் பிறகு அதை வைத்து அதிகமான பொருட்கள் வாங்க வைக்கிறார்கள்.
நியூரோ மார்க்கெட்டிங் சக்தி வாய்ந்த கருவி. பெரும்பாலும் நம்மால் அணுக முடியாததை அது நிறுவனங்களிடம் தருகிறது. அது தான் நம் ஆழ்மனம். இந்த உண்மையை புரிந்து கொண்டால் நம் மூளை எப்படி இயங்கும் என்று தெரிந்து கொண்டால் சரியான முடிவுகளை எடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.