உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் 2023 புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகின்றனர். புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்க காத்திருக்கின்றனர். சொந்த ஊர்களிலும், வெளிநாடுகளிலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் 2023 புத்தாண்டு பிறக்க இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளது. உலகம் முழுவதும் புது வருடம் (புத்தாண்டு) வெவ்வேறு நேரங்களில் வருகிறது. அந்த நாட்டின் நேரப்படி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் பூமியில் இருந்து 400 கி.மீ தொலைவில் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் எப்போதும் புத்தாண்டு கொண்டாடப்படும்? எனக் கேள்வி எழுந்துள்ளது, இதற்கு விடை இங்கு பார்ப்போம். ஐ.எஸ்.எஸ் வினாடிக்கு சுமார் 7.6 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. அதாவது, விண்வெளி நிலையம் பூமியை ஒரு நாளைக்கு 16 முறை சுற்றி வருகிறது. 16 சூரிய உதயம்,16 முறை அஸ்தமனங்கள் வழியாக பயணிக்கிறது. மேலும், விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அமெரிக்காவிலிருந்து ஜப்பான் வரை பல்வேறு நேர மண்டலங்களைக் கொண்ட நாடுகளில் இருந்து வருகிறார்கள். ஆகவே, விண்வெளி வீரர்கள் எந்த நேர மண்டலத்தைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் எப்போது புத்தாண்டு கொண்டாடுவார்கள்?
ஐ.எஸ்.எஸ் விண்வெளி வீரர்கள் ஜனவரி 1, 2023 இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு புத்தாண்டு கொண்டாடுவார்கள். இதற்கு காரணம், சர்வதேச விண்வெளி நிலையத்தில், கிரீன்விச் சராசரி நேரம் (Greenwich Mean Time) என்றும் அழைக்கப்படும் யுனிவர்சல் ஒருங்கிணைக்கப்பட்ட நேரத்தை (Universal Coordinated Time) பின்பற்றுகிறார்கள். யுசிடி மத்திய ஐரோப்பிய நேரப்படி ஒரு மணி நேரமும், இந்திய நேரப்படி ஐந்தரை மணி நேரமும் (5.30) மணி நேரமும் பின்னால் உள்ளது. அதாவது நமக்கு புத்தாண்டு பிறந்து 5.30 மணி நேரத்திற்கு பின் ஐஎஸ்எஸ்ஸில் புத்தாண்டு கொண்டாடுவார்கள்.
தற்போது, ஐ.எஸ்.எஸ்ஸில் 7 விண்வெளி வீரர்கள் உள்ளனர். நாசா வீரர் பிராங்க் ரூபியோ, ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் வீரர் டிமிட்ரி பெட்லின், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) விண்வெளி வீரர் கொய்ச்சி வகாடா, நாசா விண்வெளி வீரர்கள் ஜோஷ் கசாடா மற்றும் நிக்கோல் மான் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர்கள் செர்ஜி ப்ரோகோபியேவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/