டென்னிஸ் டிட்டோ, 21 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுற்றுலா சென்று வந்தார். இந்தநிலையில் அடுத்ததாக, நிலவுக்கு சுற்றுலா செல்ல எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுற்றுலா சென்றதன் மூலம் உலகின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி என்று பெயர் பெற்றார்.
21 ஆண்டுகளுக்கு முன்பு, டென்னிஸ் டிட்டோ (82) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சிறிய பயணம் மேற்கொண்டு திரும்பினார். தற்போது நிலவுக்கு செல்ல ஒப்பந்தம் செய்துள்ளார். டிட்டோ மட்டுமல்லாது அவர் மனைவி அகிகோ உள்பட 10 பேர் செல்கின்றனர்.
டிட்டோ கூறுகையில், "நிலவு பயணத்திற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்று புதன்கிழமை தெரிவித்தார். இன்றிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறினார்.
நிலவுக்கு செல்ல பல்வேறு சோதனைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் எனப் பல செயல்முறைகள் மேற்கொள்ளப்படும். டிட்டோ 2001ஆம் ஆண்டு விண்வெளி சுற்றுலா மேற்கொண்டார்.
டிட்டோ தம்பதியினர் 5 ஆண்டுகளுக்குள் நிலவு பயணத்திற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 82 வயதான டிட்டோ பயணத்தின் போது 87 வயதில் இருப்பார். அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர் பயணத்தில் இருந்து வெளியேறுவார்.
ஜான் க்ளென் பூமியை தனது 77 வயதில் சுற்றி வந்தார். நான் அவரைவிட 10 வயது மூத்தவராக இருப்பேன் என்று டிட்டோ கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil