பத்து வருடங்களுக்கு முன்பு 2007-ஆம் ஆண்டு இதே நாள், தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே டி20 உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கவுதம் கம்பீர் - சேவாக் இணை முதல் விக்கெட்டுக்கு 136 என்ற சிறப்பான தொடக்கத்தை உருவாக்கியது.
இதன்பின் உத்தப்பா 6 ரன்களில் வெளியேற, தோனியும் யுவராஜும் களத்தில் இருந்தனர். 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது யுவராஜை பார்த்து தரக்குறைவான சில வார்த்தைகளை ஃபிளின்டாஃப் பயன்படுத்த, டென்ஷனான யுவராஜ், நேரடியாக ஃபிளின்டாஃப்புடன் சண்டைக்கு சென்றுவிட்டார். ஒருவழியாக அம்பயரும், தோனியும் தலையிட்டு யுவராஜை சமாதானப்படுத்தினர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z317-300x217.jpg)
அதன்பின் 19-வது ஓவரை வீச வேகப்பந்து வீச்சாளர் ஸ்ட்டூவர்ட் பிராட் வந்தார். அதுவரை யுவராஜ் சிங்காக இருந்தவர், யுவராஜ் சிங்கமாக மாறி அந்த ஓவரின் அனைத்து பந்துகளையும் சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டார்.
ரசிகர்கள், வீரர்கள் என ஒவ்வொருவரும் அந்த சிக்ஸர்களை ஆர்ப்பரித்துக் கொண்டாடினர். ஒவ்வொரு சிக்ஸருக்கும் கேமரா ஃபிளின்டாஃப்பை போகஸ் செய்ய, செய்வதறியாது அவர் வெட்கத்தில் தலை குனிந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z320-300x217.jpg)
அதிலும் ஐந்து சிக்ஸர் அடித்துவிட்டு, ஆறாவதாக சிக்ஸர் அடித்து யுவி சாதனைப் படைப்பாரா? என அனைவரும் ஆவலோடு காத்திருக்க, மரண சிக்ஸர் ஒன்றை தூக்கி மெர்சலாக்கினார் யுவராஜ்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z319-300x217.jpg)
ஃபிளின்டாப்பின் வாய்ச் சண்டையால் அதிகம் பாதிக்கப்பட்டது அப்போது இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்த காலிங்வுட்டும், சிறந்த புதுமுக வேகப்பந்து வீச்சாளராக பிரபலம் ஆகிக் கொண்டிருந்த பிராட்டும் தான். ஒவ்வொரு சிக்ஸருக்குப் பிறகும் பிராட்டின் முகத்தை பார்க்க நமக்கே பரிதாபமாக தான் இருந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z321-300x217.jpg)
இந்தச் சம்பவத்தை இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களும் மறந்திருக்க மாட்டார்கள், இந்திய ரசிகர்களும் மறந்திருக்கமாட்டார்கள். யுவராஜ் காட்டிய வாணவேடிக்கை நடந்து முடிந்து இன்றுடன் பத்து வருடங்கள் ஆகிவிட்டது.
https://www.youtube.com/embed/5SkBZcvuuQs