IND v AUS, 2nd Test: இந்தியாவை 146 ரன்களில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

author-image
Janardhan koushik
புதுப்பிக்கப்பட்டது
New Update
2nd Test, Perth : இந்தியாவை 146 ரன்களில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

2nd Test, Perth : இந்தியாவை 146 ரன்களில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

India v Australia, 2nd Test Perth : இந்தியா -ஆஸ்திரேலியா இடையே பெர்த்-ல் நடந்த இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் மார்கஸ் ஹாரிஸ் மற்றும் ஆரோன் பின்ச் அமைத்த century- பார்ட்னெர்ஷிப் மூலம் 326 ரன்களை எட்டியது.

Advertisment

தொடர்ந்து ஆடிய இந்தியா அணிக்கு கேப்டன் கோலியின் சதம் மற்றும் துணை கேப்டன் அஜின்கியா ரஹானேவின் அரை சதம் கைகொடுத்தது. இந்தியா 283 ரன்களை எட்டியது. இரண்டாவது இன்னிங்சில் முதல் செஷன் முடிவில் விக்கெட் இழப்பின்றி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா, இரண்டாவது செஷன் முடிவில் தடுமாறியது. முகமத் ஷமி 56 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை சாய்த்து தனது கிரிக்கெட் வாழ்வில் பெஸ்ட் பந்துவீச்சை பதிவுசெய்தார். 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா.

287 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு இந்தியாவிற்கு நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை விரட்டிய இந்தியா அணிக்கு ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து தனது மோசமான பாஃர்மினை தொடர்ந்தார் ராகுல். நம்பிக்கை நட்சத்திரம் புஜாராவும் Josh Hazzlewood பந்துவீச்சில் சிறிது நேரத்தில் நடையை கட்ட, இந்தியா நான்கு ஓவர் முடிவில் 13 /2 என்று பரிதவித்தது.

கோலி-விஜய் ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்தது. லியோன் ஓவரில் 17 ரன்களுக்கு கோலி அவுட் ஆனா பின்பு, இந்தியா அணிக்கு தோல்வி உறுதியானது. 56 ஓவர்களில் 140 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியொன் எட்டு விக்கெட்டுகள் எடுத்ததிற்காக ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 1-1 என்று சமன் செய்துள்ளது.

Advertisment
Advertisements

மூன்றாவது டெஸ்ட் போட்டி 'பாக்ஸிங் டே' என்று பிரபலமாக அழைக்கக்கூடிய டிசம்பர் 26ம் தேதி மேல்போர்ன் மைதானத்தில் தொடங்குகிறது.

India Vs Australia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: