Cricket Legends Who Failed As Captains TAMIL NEWS: சர்வதேச விளையாட்டு உலகில் “கிரிக்கெட்” அதிக ரசிகர்கள் கொண்ட விளையாடாக உருவெடுத்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த விளையாட்டை காண மைதானத்தில் குவியும் ரசிகர்கள் வெகு சிலராக இருந்தனர். அதன்பிறகு களத்தில் பந்துகளை பந்தாடிய வீரர்களால் ஆட்டம் கவனம் ஈர்க்க தொடங்கியது. இதை பின்தொடர்ந்த ரசிகர்கள், முதலில் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிடும் வீரர்கள் நோக்கியும், பின்னர், சுழல் மற்றும் வேகத் தாக்குதலால் விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர்களை நோக்கியும் குவிந்தார்கள். பிறகு, அணியை அசத்தலாக வழிநடத்தி கோப்பையை முத்தமிட செய்த கேப்டன்களுக்கு எனவும் ஒரு திரளான ரசிக பெருங்கூட்டம் உருவாகியது. அது தற்போதும் உருவாகி வருகிறது.
கேப்டன் ரன்களை குவிப்பதிலும், விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் அணிக்கு பெரிய பங்களிப்பை கொடுக்காவிட்டாலும், அணியை திறம்பட வழிநடத்தும் மாவீரர்களாக இருக்கிறார்கள். ஆனால், இந்தப் பதவியில், மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த வீரரால் தாக்குப்பிடிக்க முடியதா நிலையே உள்ளது. உதாரணமாக, மாடர்ன் டே கிரிக்கெட்டில் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஐசிசி தொடரில் ஒரு கோப்பையைக் கூட வெல்லாமல் தனது கேப்டன்சியை துறந்தார். 3 ஃபார்மெட்டிலும் விளையாடி வரும் அவர் தனது 71வது சதத்தை பதிவு செய்யமுடியாமல் கடந்த 3 ஆண்டுகளாக திணறி வருகிறார். தவிர, பணிச்சுமை அதிகரிப்பே அவர் கேப்டன் பதவியில் இருந்து விலக காரணம் என்று அவரே குறிப்பிட்டு இருந்தார்.
எனவே, ஒரு கிரிக்கெட் அணியை வெற்றிகரமான அணியாக வழிநடத்தும் கேப்டன் பதவி என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இந்த பதவியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ், எம்.எஸ் தோனி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் போன்ற வெகு சிலரே வெற்றிகரமாக கேப்டன்களாக திகழ்ந்துள்ளனர். களத்தில் வெற்றி வாகை சூடி வீரர்கள் கேப்டன் பதவி என வரும் போது பெரும் சரிவையே சந்தித்துள்ளனர். அவ்வகையில், கேப்டன்களாக தோல்வியுற்ற 4 முன்னணி வீரர்களை இங்கு பார்க்கலாம்.
சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தனது சிறப்பான பேட்டிங் மற்றும் மென்மையான நடத்தை மூலம் உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தார். அவரது வெற்றிகரமான மற்றும் பிரகாசமான கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்த ஒரே களங்கம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்சி தான்.

சச்சின் இந்திய அணியை இரண்டு முறை கேப்டனாக வழிநடத்தினார். அது முதலில் 1996 ஆம் ஆண்டில் நடந்தது. அவரது தலைமையிலான இந்திய அணி பெரிதும் சோபிக்காதாதல், சில காலமே அணியை வழிநடத்தினார். ஆனால் அவரது இரண்டாவது பதவிக்காலம் கணிசமாக மோசமாக இருந்தது. இது அவரை கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்கவும் வழிவகுத்தது.
சச்சின் வழிநடத்திய இந்திய அணி 25 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகளையும், 73 ஒருநாள் போட்டிகளில் 23 வெற்றிகளையும் மட்டுமே பெற்றது. இறுதியில் இந்தியாவுக்கு சாதகமாக இருந்த பல குறிப்பிடத்தக்க தேர்வுகளுக்கு சச்சின் பெருமை சேர்த்திருந்தாலும், அணியின் கேப்டன் என்கிற ரோல் அவருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரவில்லை.

அவரது பதவி காலத்தில், அவர் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோருடன் அடிக்கடி ஆலோசனையில் இருந்தார். அவர்கள் களத்தில் செய்த தேர்வுகளால் இவர் பெரும் பின்னடைவை சந்தித்தார். 2007ம் ஆண்டில் டிராவிட் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியபோது சச்சின் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்க அழைக்கப்பட்டார். ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்து, அவருக்குப் பதிலாக தோனியை கேப்டனாக நியமிக்குமாறு கோரினார். ஒரு கேப்டனாக தோனியின் திறனை அவர் முதலில் பார்த்தார். அந்த தருணத்திலிருந்து விஷயங்கள் எப்படி நடந்தன என்பது நமக்கு தெரியும்.
ராகுல் டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணியில் 1996 ஆம் ஆண்டு இணைந்த ராகுல் டிராவிட் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அழியா முத்திரையை பதித்த அவருக்கு ‘தி வால்,’ ‘ஜம்மி,’ மற்றும் ‘மிஸ்டர் நம்பக்கூடியவர்’ என்கிற புனைபெயர்கள் ரசிகர்களாலும், சக வீரர்களாலும் பெருமையுடன் வழங்கப்பட்டன.

2005 ஆம் ஆண்டில், பிரபல கங்குலி-கிரெக் சேப்பல் சர்ச்சை வெடித்த போது, இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக டிராவிட் பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான இந்திய அணி, 2006 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் என வெளிநாட்டு மண்ணில் நடந்த தொடர்களை ஒரு கேப்டனாக வென்றெடுக்க உதவி, அணிக்கு பெருமை சேர்த்தார்.

இருப்பினும், 2007 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணி தகுதிச் சுற்றோடு வெளியேறியதால், அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மேலும், அவரது கேப்டன்சி குறித்து பலரும் கேள்வி எழுப்பி கருத்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதனால் அவர் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
அனில் கும்ப்ளே
இந்திய கிரிக்கெட் அணியில் சுழல் மன்னரான வலம் வந்தவர் கும்ப்ளே. 1990 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அடியெடுத்து வைத்த அவர், 2010 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். சுமார் 18 ஆண்டுகாலம் இந்திய அணியில் விளையாடிய கும்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மேலும், ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்கிற சாதனையையும் படைத்தார்.

2007ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு, ட்ராவிட் கேப்டன் பதவியில் இருந்து விலகி போது, டெஸ்ட் அணியின் கேப்டனாக கும்ப்ளே பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த நேரத்தில் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் எம்.எஸ். தோனி பொறுப்பேற்பது, மிக விரைவானது, அதே நேரத்தில் சச்சின் போன்ற மூத்த வீரர்கள் கேப்டன் பதவியை விரும்பவில்லை. எனவே, இந்திய டெஸ்ட் அணியை மட்டும் கும்ப்ளே வழிநடத்தினார்.

கும்ப்ளே கேப்டனாக இருந்த காலத்தில், 14 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 3 வெற்றி, 5ல் தோல்வி மற்றும் 6 போட்டிகளை டிரா செய்தது. அவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட உடனேயே, கிரிக்கெட்டில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் மறக்க முடியாத தொடரை வென்றெடுத்தார். ஆனால் 2008 நவம்பரில் அவர் ஓய்வு பெற்றதால், கேப்டனாக அவரது பணி ஒரு வருடத்திற்கும் குறைவாகவே நீடித்தது. அதைத் தொடர்ந்து தோனி மூன்று வடிவங்களிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கிறிஸ் கெய்ல்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் மெஷின், சிக்ஸர் மன்னன் என்று அழைக்கப்பட்ட கிறிஸ் கெய்லுக்கு கேப்டன்சி ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. அவரது நம்பமுடியாத ஆக்ரோஷமான பேட்டிங் ஸ்டைல் அவரது தலைமையின் கீழான வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. ஆனால், கெயில் தனது முன்னோடியான லாராவை விட அதிகம் ரசிகர்களை ஏமாற்றினார். மேலும், லாராவை விட மோசமான ஒருநாள் கேப்டன் என்கிற சாதனையையும் அவர் கொண்டிருந்தார்.

கிறிஸ் கெய்ல் தலைமையிலான அணி 53 ஆட்டங்களில் 17 வெற்றிகள் மற்றும் 30 தோல்விகள் மட்டுமே பெற்றது. அதோடு, பின்தங்கிய மனநிலை கொண்ட கிரிக்கெட் வீரர்கள் “கேப்டன் பதவியை” ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு உதாரணமாக மாறிப்போனார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil