கேர்ள் ஃப்ரெண்ட்களால் நிராகரிக்கப்பட்ட ஐந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

கங்குலியும், நக்மாவும் தென்னிந்தியாவில் உள்ள சில கோவில்களுக்கு சென்று, அங்கு திருமணம் செய்து கொண்டவர்கள் செய்யும் பூஜையை தாங்களும் செய்ததாக கூறப்படுகிறது.

விராட் கோலி – சாரா ஜேன் டைஸ்

தற்போதைய இந்திய அணியின் கேப்டனும், ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலி, முன்னாள் இந்திய அழகி சாரா ஜேன்னுடனும் தற்போது டேட்டிங் செல்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெங்களூருவில் உள்ள ஸ்கை பாரில் தான் கோலியும் சாராவும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டனர். இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரால், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

அப்போதே இருவருக்குள்ளும் ஒரு ஸ்பார்க் பற்றிக் கொள்ள, அவர்கள் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த உறவு பற்றி வெளியே தெரிய வேண்டாம் என்பதற்காக, இருவரும் ரகசியமாக அதை காப்பதாக கூறப்படுகிறது. பொது இடங்களில், குறிப்பாக மும்பையில் நேரில் சந்தித்துக் கொள்ள வேண்டாம் என்று இருவரும் பரஸ்பரம் முடிவெடுத்துக் கொண்டார்கள் என தெரிகிறது. இருப்பினும், இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

தற்போதைய நிலை: விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவுடன் டேட்டிங் செல்கிறார்.

யுவ்ராஜ் சிங் – தீபிகா படுகோன்:

பஞ்சாப் மைந்தன் யுவ்ராஜ் சிங், பாலிவுட் நடிகை தீபிகாவுடன் செய்த டேட்டிங் பற்றி பலரும், பலவிதமாக அரசல்புரசலாக பேசினர். அப்போது அதை இருவரும் நேரடியாக ஒப்புக் கொள்ளவில்லை. “எப்போதெல்லாம் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கிறார்களோ, அப்போது இருவரும் இறுக்கமாக கட்டியணைத்துக் கொள்கிறார்கள்” என பாலிவுட்மந்த்ரா.காம் முன்பு குறிப்பிட்டிருந்தது. இந்திய கிரிக்கெட் அணி, கடந்த 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருந்த போது, யுவ்ராஜ் – தீபிகா ஜோடி ஒன்றாக அமர்ந்து டின்னர் சாப்பிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலை: யுவ்ராஜ் சிங், ஹசேல் கீச் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

சவுரவ் கங்குலி – நக்மா:

2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இச்செய்தி புதியதாக இருக்கலாம். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, முகமது அசாருதீனின் பெயர் அடிப்பட்டு அவர் கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்பட்டு, கங்குலியின் சகாப்தம் தொடங்கிய போது தான், இந்த வதந்தியும் தொடங்கியது. சில தகவல்களின் படி, கங்குலியும், நக்மாவும் தென்னிந்தியாவில் உள்ள சில கோவில்களுக்கு சென்று, அங்கு திருமணம் செய்து கொண்டவர்கள் செய்யும் பூஜையை தாங்களும் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கங்குலியின் மனைவி டோனா கூறுகையில், “இது எல்லாம் பொய்யான செய்தி. சில செய்தித் தாள்கள் இதுபோன்ற செய்திகளை பரப்ப நினைப்பதை பார்க்கும் போது, எனக்கு மிகுந்த கோபம் ஏற்படுகிறது. சவுரவ் பெயர் இந்த வதந்தியில் சிக்கியிருப்பது துரதிருஷ்டவசமானது.

கங்குலியும் இந்த வதந்திகளை மறுத்தார். ஆனால், அதன்பின் இரண்டு வருடம் கழித்து, நக்மா இந்தப் பிரச்சனை குறித்து அளித்த பேட்டியில், “ஒருவர் வாழ்வில் ஒருவர் இருப்பதை மறுக்காத வரை, எந்தவொரு நபருக்கும் அவர்கள் விரும்பும் எதையும் சொல்ல முடியும்” என்றார்.

தினேஷ் கார்த்திக் – நிகிதா வன்ஜரா:

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக உள்ள தினேஷ் கார்த்திக் முதலில் நிகிதா வன்ஜரா எனும் பெண்ணைத் தான் பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த 2012 வரை ஒற்றுமையாக தான் வாழ்ந்தார்கள். அதன்பின், மற்றொரு இந்திய அணி வீரரான முரளி விஜய் மீது நிகிதா காதல் கொண்டார். அதற்கு சாட்சியாய் ஒரு குழந்தையும் பெற்றெடுத்தார். பின் தினேஷை விவாகரத்து செய்த நிகிதா, முரளி விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின், இந்தியாவின் சிறந்த ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகாவை, தினேஷ் கார்த்திக் திருமணம் செய்து கொண்டார்.

ரோஹித் ஷர்மா – சோஃபியா ஹயாத்:

பிரிட்டிஷ் – இந்திய அழகியான சோஃபியா ஹயாத், இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் ஷர்மாவின் முதல் கேர்ள் ஃப்ரெண்டாக இருந்தார். இதுவரை சோஃபியா இந்தச் செய்தியை மறுத்து வருகிறார். ஆனால், இருவரும் சேர்ந்து இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அப்படி சொல்லவில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close