பாகிஸ்தான்+ வங்கதேசம் = இந்தியா ---> இங்கிலாந்து. இந்த நான்கு அணிகள் தான் 2017 சாம்பியன்ஸ் லீக் தொடரில் அரையிறுதிக்கு நுழைந்திருக்கின்றன. பல கிரிக்கெட் வல்லுனர்களின் கணிப்பையும் தவிடுபொடியாக்கியுள்ளது இந்த நான்கு அணிகளின் என்ட்ரியும். இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலரின் அரையிறுதி கெஸ்ஸிங்கில் இருந்தது. ஆனால், முதன்முதலாக சாம்பியன்ஸ் டிராஃபியில் கால் பதித்த வங்கதேசமும், பல புதிய முகங்கள் கொண்ட அனுபவமில்லாத பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்குள் நுழைந்திருப்பது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.
உலகின் 'நம்பர் 1' அணியான தென்னாப்பிரிக்கா, 'உலக சாம்பியன்' ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் லீக் சுற்றோடு வெளியேறிவிட்டன. குறிப்பாக, ஆஸ்திரேலியாவை 'மழை' வச்சு செய்தது. அந்த அணிக்கு இரண்டு ஆட்டங்கள் மழையால் பாதித்தது. எது எப்படியோ... இப்போ இந்த நான்கு அணிகளும் அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டன.
ஆனால், இந்த நான்கு அணிகளுக்குள்ளும் உள்ள ஒரு மிகப்பெரிய தொடர்பை மையப்படுத்திய ட்வீட் ஒன்று செம வைரலாகி வருகிறது. அதனை படிப்போரை அட! ஆமாம்ல போட வைத்துவிட்டது இந்த வைரல் ட்வீட்.
"ஒரே நாடு மூணா பிரிஞ்சி செமி பைனல் வந்து நிக்குது.
மூணா பிரிச்சி விட்டவனும் வந்து நிக்குறான்...."
புரியலையா...? அப்டியே கொஞ்சம் மேலே 'ஸ்க்ரோல்' செய்து இந்த கட்டுரையின் முதல் வரியை படிங்க.
இப்போ புரிஞ்சிடுச்சா.. ஆங்! ஆனா, இதை மல்லாக்க படுத்துக்கிட்டு யோசிச்சது தான் யாருனு தெரியல.