இந்திய அணியை சாய்த்த வம்சாவளி வீரர்… யார் இந்த அஜாஸ் படேல்…!

Mumbai test: News Zealand’s Ajaz Patel became 3rd Bowler To Take 10 Wickets In An Innings In Test Cricket History Tamil News: சர்வதேச டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய 3வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார் அஜாஸ் படேல்.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ajaz Patel tamil news: NZ's Ajaz takes 10 Wickets In An Innings against ind at mumbai test

Ajaz Patel tamil news: நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் அஜாஸ் படேல். இந்திய வம்சாவளி வீரரான இவர் மும்பையில் பிறந்தார். அவருக்கு 8 வயது இருந்தபோது பெற்றோர்கள் அவரை நியூசிலாந்து அழைத்துச் சென்று விட்டனர்.

Advertisment
publive-image

நியூசிலாந்து மண்ணில் நடந்த உள்ளூர் போட்டிகளில் கலக்கி வந்த அஜாஸ் அந்நாட்டு அணியில் கடந்த 2018ம் ஆண்டு இணைந்தார். முதலில் அவர் பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தான் அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டில் டி20 அணியிலும் இடம் பிடித்தார்.

அபார பந்து வீச்சு - புதிய சாதனை படைத்த அஜாஸ் படேல்

Advertisment
Advertisements

தற்போது இந்திய அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நியூசிலாந்து அணியில் விளையாடி வரும் அஜாஸ் படேல் மிகச்சத்துல்லியமாக பந்துகளை வீசியுள்ளார். குறிப்பாக, நேற்றுமுதல் நடைபெற்று வரும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட்டில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். அவர் நேற்று முதல் நாளில் ஷுப்மன் கில், விராட் கோலி, புஜாரா, ஷ்ரேயஸ் அய்யர் என இந்திய அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

publive-image

தொடர்ந்து இன்று 2ம் நாள் ஆட்டத்தில் விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இவர் இந்திய அணியின் தூண் போல் நின்று விளையாடி 311 பந்துகளில் 17 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என 150 ரன்களை குவித்த மயங்க் அகர்வால் விக்கெட்டையும் வசப்படுத்தினார்.

publive-image

மேலும், பின்னர் வந்த அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், முகமது சிராஜ் ஆகியோரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம் அஜாஸ் படேல் சர்வதேச டெஸ்ட் அரங்கில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

publive-image
அஜாஸ் படேல்

அஜாஸ் படேல் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய போது தனது 3-வது ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். மேலும், இந்திய அணிக்கெதிராக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

அதோடு, சர்வதேச டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய 3வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார் அஜாஸ் படேல். இந்த சாதனையை படைத்த முதல் வீரர் இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் (10/53) ஆவார். அவர் 1956ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்த சாதனை நிகழ்த்தினார்.

2வது வீரர் இந்திய அணியின் சுழல் மன்னர்களில் ஒருவரான அனில் கும்ப்ளே (10/74) ஆவார். இவர் கடந்த 1999 ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்த சாதனை நிகழ்த்தினார். தற்போது இந்த சாதனை நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் (10/119) இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் நிகழ்த்தி இருக்கிறார்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India India Vs New Zealand Sports Cricket New Zealand Ajaz Patel Indvsnz

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: