'இதற்குமுன் இப்படியொரு பலம் வாய்ந்த இந்திய அணியை பார்த்ததில்லை' என்ற கிரிக்கெட் வல்லுநர்களின் வார்த்தையோடு நடப்பு சாம்பியன்ஸ் தொடரில் கம்பீரமாக களமிறங்கியது இந்திய அணி. அந்த கம்பீரத்தோடு பரம எதிரியான பாகிஸ்தானை பந்தாடியது இந்திய அணி (ரைமிங்..ரைமிங்). அடுத்து, அதே நம்பிக்கையோடு நிர்ணயித்த சிறப்பான இலக்கை இலகுவாக எட்டியது இலங்கை. (அட...ரைமிங் பொங்குதே!)
சரி விஷயத்திற்கு வருவோம்.....
அன்புள்ள கேப்டன் விராட் கோலிக்கு,
என்னாத்துக்கு நேத்து அஷ்வினை உட்கார வச்சீங்க? எந்த நம்பிக்கையில ஹர்திக் பாண்ட்யாவ 'இந்திய அணியின் சொத்து'னு சொன்னீங்க? ஏங்க! அவரு இப்போதாங்க வளரவே ஆரம்பிச்சு இருக்காரு. அதுக்குள்ள அவர் மேல ஏன் இவ்ளோ நம்பிக்கை? சிக்ஸர்கள் அடிப்பதில் சிறப்பாக தான் செயல்படுகிறார். ஆனால், 'கன்சிஸ்டன்சி' என்பதை பற்றி இனிமே தாங்க அவர் பாடம் படிக்கவே ஆரம்பிக்கணும். பார்த்தீங்கல... நேத்து அவர் சிக்ஸ் அடிச்ச அடுத்த பாலே தூக்கி கையில கொடுத்துட்டு போனத...! இப்போதைக்கு அவரது மெச்சூரிட்டி அவ்வளவுதான். அதுக்குள்ள அவரை சொத்துனு சொல்வதெல்லாம் ஓவர் கோலி. நான் பாண்ட்யாவை குறை சொல்லல.. ஆனா, இப்போ அவரு ஒரு ஸ்டூடன்ட். அவ்வளவுதான். அவர் சைமன்ட்ஸா ஆவாரா இல்ல யூசுஃப் பதானா மாறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பாக்கணும்.
ஒத்துக்குறேன்... இங்கிலாந்து பிட்சில் ஸ்பின்னுக்கு அதிகம் வேலையில்லன்னு ஒத்துக்குறேன்.. ஆனா நேத்து என்னாச்சு?
ஜடேஜா மேல வச்சிருந்த நம்பிக்கையை அஷ்வின் மேல ஏன் வைக்கலங்கிறதுதான் தான் என் கேள்வி. இந்த கேள்வியை நேத்து தோத்ததுக்காக மட்டும் நான் கேக்கல. ஃபர்ஸ்ட் மேட்ச்சுல ஜடேஜா எடுத்த ரெண்டு விக்கெட்டும் போல்டோ, எல்பியோ கிடையாதுங்க. அவுட்டான ரெண்டு பேட்ஸ்மேனும், சிக்ஸ் அடிக்க நினைச்சு தூக்கி கையில் கொடுத்துட்டு போனாங்க. அப்போவே நீங்க உஷாராகியிருக்க வேண்டாமா? அதுக்கப்புறமும் ஜடேஜா என்கிற ஒற்றை ஸ்பின் அட்டாக் மட்டும் போதும்-னு எப்படி முடிவுக்கு வந்தீங்க கோலி? நேத்து ஜடேஜா ஓவரை ஸ்ரீலங்கா பேட்ஸ்மேனுங்க அடிச்ச அடியை நீங்களும் பார்த்து இருப்பீங்க... பாத்துக்கோங்க!
அப்புறம்... கேதார் ஜாதவுக்கு கொஞ்சம் ஃபீலடிங் சொல்லிக் கொடுங்க. நல்லா அடிக்குறாரு. ஆனா, அந்த பெயரை தனது மோசமான ஃபீல்டிங்கால கெடுத்துக்குறாரு.
வேற என்னமோ சொல்லணும்னு நினைச்சேன்.ம்ம்ம்ம்.. ஆங்! ஏங்க இந்த பும்ரா 'ஐபிஎல்' மட்டும் தான் யார்க்கர்லாம் போடுவாரா? சர்வதேச மேட்ச்சுங்கள்ல போடவா மாட்டேன்னு சத்தியம் எடுத்து இருக்காரா? புரியல எனக்கு. நானும் ஐபிஎல்-ல அவரு பண்ண மாயாஜாலத்தை காட்டுவாரான்னு எதிர்பார்த்தேன். நல்லா காட்டினார்.
இத்தனை வருஷமா கிரிக்கெட் ஆடி, இன்னமும் யுவராஜ் ஸ்பின் பவுலிங்கிற்கு திணறுறாரு. இதெல்லாம் அட்வைஸ் இல்ல கோலி. நேத்து மேட்ச் பார்த்துக்கிட்டு இருக்கும் போது வெளியான எங்க ஏரியா பசங்களின் புலம்பல். பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க அதுக்கு!
சரி விடுங்க! அடுத்த மேட்ச் யார் கூட தெரியும்ல. ஆங்! சவுத் ஆப்ரிக்காவை ஸ்பின்ன வச்சு கொஞ்சம் மிரட்டலாம். ஃபாஸ்ட் பவுலிங் பருப்புலாம் அங்க வேகாது கோலி. அதனால், யோசிச்சு ஒரு நல்ல டீமை செலக்ட் பண்ணுங்க. கேதர் ஜாதவுக்கு பதில் அஷ்வினை எடுங்க. உமேஷுக்கு பதில் முகமது ஷமியை எடுங்க. எதோ என் கடுகளவு கிரிக்கெட் அறிவுக்கு ஏத்தமாதிரி அட்வைஸ் சொல்லுறேன். பாத்து ஏதுனா செய்யுங்க.
இந்தியா - ஸ்ரீலங்கா மேட்ச்சுக்கு முன்னாடி இலங்கை முன்னாள் லெஜண்ட் சங்கக்காரா ஒரு வார்த்தை சொன்னார். 'பலம் வாய்ந்த இந்தியாவை ஜெயிக்கணும்-னா இலங்கை கர்வத்தோடு ஆடணும்' னு. இந்த கர்வத்திற்கு ரெண்டு விதமான அர்த்தம் இருக்குது கோலி. அதை நாம் எப்படி எடுத்துக்குறோம் என்பதை பொறுத்து தான் அது இருக்கு. புரிஞ்சிப்பீங்கனு நினைக்குறேன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.