ஜம்முவில் இன்னொரு உம்ரான் மாலிக்? அசால்டாக 140 பிளஸ் போடும் வாசீம் பஷீர்

வேகப்பந்து வீச்சாளர் வாசீம் பஷீர், உள்நாட்டுப் போட்டிகளில் தனது அதிவேக பந்துகளால் பேட்ஸ்மேன்களை பயமுறுத்தி வருகிறார்.

Another Umran Malik from Jammu & Kashmir, pacer Waseem Bashir Tamil News
IPL 2023: Another Umran Malik in making? Waseem Bashir Jammu & Kashmir pacer clocks 150kmph – Watch Video Tamil News

IPL 2023 – Umran Malik – Jammu & Kashmir  – Waseem Bashir Tamil News: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிவேக பந்துகளை வீசி மிரட்டியவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் உம்ரான் மாலிக். ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த இந்த வேகப்புயல் கடந்த ஐபிஎல் சீசனில் முன்னணி வீரர்கள் பலரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், அதிகபட்சமாக மணிக்கு 157 கிலோமீட்டர் வேகத்தில் பந்துகளை வீசி தொடரின் மற்றும் போட்டியின் அதிவேக பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார். இவரை அடுத்த ஆண்டுக்கான தொடரிலும் ஐதராபாத் அணி தக்க வைத்துள்ளது.

அதிவேக பந்துவீசி மிரட்டிய உம்ரான் மாலிக்… அவரின் சாதனையை அவரே முறியடிப்பு!

ஜம்முவில் இன்னொரு உம்ரான் மாலிக்? அசால்டாக 140 பிளஸ் போடும் வாசீம் பஷீர்

இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் இருந்து மற்றொரு உம்ரான் மாலிக் உருவெடுத்துள்ளார். 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் வாசீம் பஷீர், உள்நாட்டுப் போட்டிகளில் தனது அதிவேக பந்துகளால் பேட்ஸ்மேன்களை பயமுறுத்தி வருகிறார். தற்போது மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துகளை வீசி வரும் இவரை, உம்ரான் மாலிக்கை அடையாளம் காட்டிய அதே முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தான் பட்டை தீட்டி இருக்கிறார்.

​​பஷீர் தற்போது ஜம்மு – காஷ்மீரின் 25 வயதுக்குட்பட்ட அணிகளில் அங்கம் வகிக்கிறார். அவரின் துல்லியமான வேகப்பந்துவீச்சு அவரை முக்கிய வீரராக மாற்றியுள்ளது. இதனால், ஐபிஎல் 2023 மினி-ஏலத்தில் பஷீரை வாங்க சில அணிகள் ஆர்வம் காட்ட அதிக வாய்ப்புள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Another umran malik from jammu kashmir pacer waseem bashir tamil news

Exit mobile version