Advertisment

'பவன் செராவத்தை தமிழ் தலைவாஸ் தக்க வைக்காது': அனுப் குமார் பரபரப்பு தகவல்

எதிர்வரும் 10வது பி.கே.எல் தொடரில் பவன் செஹ்ராவத்தை தமிழ் தலைவாஸ் அணி தக்கவைக்காது என்ற பரபரப்பு தகவலை முன்னாள் இந்திய கேப்டன் அனுப் குமார் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anup Kumar on Pawan Sehrawat Tamil Thalaivas PKL Season 10 Tamil News

தமிழ் தலைவாஸ் அணி முந்தைய சீசனின் ஏலத்தில் பவன் செராவத்தை பி.கே.எல் தொடர் வரலாற்றிலே அதிக விலைக்கு (ரூ. 2.26 கோடி) வாங்கியிருந்தது.

Pro Kabaddi League 10 - Tamil Thalaivas -  Pawan Sehrawat - Anup Kumar Tamil News: 10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடக்கும் தேதிகளை மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், 105 பி.கே.எல் போட்டிகளில் 987 புள்ளிகளைப் பெற்றுள்ள நட்சத்திர வீரரான பவன் செராவத், தான் ‘பத்தாவது சீசனுக்காக மிகவும் உற்சாகமாக இருப்பதாக’ கூறி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisment

சென்னையை தளமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணியில் களமாடி வரும் அவர் சமீபத்தில், “புரோ கபடி லீக் ஒரு அற்புதமான பயணத்தை கடந்துள்ளது. நிச்சயமாக அதன் பத்தாவது சீசன் மிக பிரமாண்டமானதாகும். அனைத்து ரசிகர்களுடனும் சீசன் 10 -ஐக் கொண்டாடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.” என்று கூறியிருந்தார்.

Pro Kabaddi League: Pawan Sehrawat Can't Wait To Celebrate PKL Season 10 With Fans Tamil News

இந்த நிலையில், பிரபல ரைடரும் முன்னாள் இந்திய கபடி கேப்டனுமான அனுப் குமார், கேல் நவ் (Khel Now) உடனான பிரத்யேக நேர்காணலில் பவன் செராவத் குறித்து அதிர்ச்சியூட்டும் செய்தியை குறிப்பிட்டுள்ளார். அவர் எதிர்வரும் 10வது புரோ கபடி லீக் போட்டியில் பவன் செஹ்ராவத்தை தமிழ் தலைவாஸ் அணி தக்கவைக்காது என்று ஊகித்துள்ளார்.

தமிழ் தலைவாஸ் அணி முந்தைய சீசனின் ஏலத்தில் பவன் செராவத்தை பி.கே.எல் தொடர் வரலாற்றிலே அதிக விலைக்கு (ரூ. 2.26 கோடி) வாங்கியிருந்தது. அவரைத் தக்கவைத்துக் கொண்டால், மற்ற வீரர்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும், வலுவான அணியை உருவாக்க அணி போராடக்கூடும். ஏலத்தில் அணி அவருக்காக எஃப்.பி.எம் FBM (இறுதி ஏலப் போட்டி) அட்டையைப் பயன்படுத்தலாம் என்றும் அனுப் குமார் கூறியுள்ளார்.

publive-image

“இந்த முறையும் பவன் செராவத் ஏலத்தில் பங்கேற்பார். என்னைப் பொறுத்தவரை, இந்த முறையும் அவர் இரண்டு கோடிக்கு மேல் ஏலம் பெறுவார். இது தவிர, 2 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்படும் குறைந்தது நான்கு முதல் ஐந்து வீரர்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது இந்த வீரர்களுக்கு அவர்களின் உண்மையான முக்கியத்துவத்தை தெரியப்படுத்தும்." என்று அனுப் குமார் கூறியுள்ளார்.

கடந்த சீசனில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட பவன் செராவத்தை தமிழ் தலைவாஸ் அணி கேப்டனாகவும் நியமித்தது. இருப்பினும், சீசனின் தொடக்கத்தில் பவன் காயத்தால் பாதிக்கப்பட்டார். காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், அவர் தொடரில் இருந்தே வெளியேறினார். எனினும், தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது. புதிய சீசன் நெருங்கி வருவதால், தமிழ் தலைவாஸ் பவன் செஹ்ராவத்தை தக்க வைத்துக் கொள்ளுமா? இல்லையா" என்பது பற்றிய கேள்விகள் நிறைந்துள்ளன.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Pro Kabaddi Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment