என்னால் அவ்வளவு சிறப்பாக செயல்பட முடியவில்லை: வேதனை தெரிவித்த தமிழ் தலைவாஸ் கேப்டன்

உபி யோதாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரைடிங் பிரிவில் தன்னால் அவ்வளவு சிறப்பாக செயல்பட முடியாமல் போனதாக கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் வேதனை தெரிவித்துள்ளார்.

உபி யோதாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரைடிங் பிரிவில் தன்னால் அவ்வளவு சிறப்பாக செயல்பட முடியாமல் போனதாக கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் வேதனை தெரிவித்துள்ளார்.

author-image
Martin Jeyaraj
New Update
Arjun Deshwal on Tamil Thalaivas poor performance PKL 12 UP Yoddhas Tamil News

புரோ கபடியில் தமிழ் தலைவாஸ் மற்றும் உபி யோதாஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 39 - 22 என்கிற புள்ளிகள் கணக்கில் உ.பி யோதாஸ் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது. 

12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்அரங்க மைதானத்தில் நடைபெற்ற 46-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் உபி யோதாஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 39 - 22 என்கிற புள்ளிகள் கணக்கில் உ.பி யோதாஸ் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது. 

Advertisment

இப்போட்டியில் புள்ளிகளை எடுக்க தமிழ் தலைவாஸ் தொடக்கம் முதல் போராடியது. டிஃபென்ஸில் சிறப்பாக செயல்பட்டாலும் ரைடிங்கில் சொதப்பி எடுத்தது. குறிப்பாக, கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு புள்ளி மட்டுமே எடுத்தார். பின்னர் 2-ம் பாதியில் கிட்டத்தட்ட 32 நிமிடங்களுக்கு பிறகு தான் அடுத்த புள்ளியை எடுத்தார். மொத்தமாக அவர் 2 புள்ளிகளை மட்டுமே எடுத்தார். 

இந்நிலையில், உபி யோதாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரைடிங் பிரிவில் தன்னால் அவ்வளவு சிறப்பாக செயல்பட முடியாமல் போனதாக கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் வேதனை தெரிவித்துள்ளார். இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் தனது அணி வீரர்களுக்கு என்ன செய்தி சொல்லப் போகிறார் என்பது குறித்தும் தெரிவித்தார். 

இது தொடர்பாக போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், "தவறுகள் நடப்பது பரவாயில்லை, நீங்கள் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். கடந்த போட்டியில் அதிக தவறுகள் இருந்தன. ஆனால் நாங்கள் நன்றாக விளையாடினோம், இன்று டிஃபென்ஸ் நன்றாக இருந்தது. ஆனால், என்னால் தான் அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியவில்லை. எனவே, தவறுகளை நான் ஆராய்கிறேன், அவ்வளவுதான்" என்று கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் கூறினார். 

Advertisment
Advertisements
Tamil Thalaivas

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: