Advertisment

தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜுனா விருது; சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக டேபிள் டென்னீஸ் விளையாட்டு வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Arjuna awards to Pragnananda and Elavenil Valarivan, Sharath Kamal, Achanta Sharath Kamal, செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனிலுக்கு அர்ஜுனா விருது, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு, Achanta Sharath Kamal Table Tennis, Major Dhyan Chand Khel Ratna Award, Tamil Indian Express, Sports News

தமிழகத்தைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக டேபிள் டென்னீஸ் விளையாட்டு வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நவம்பர் 30-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.

Advertisment

மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2022 தேசிய விளையாட்டு விருதுகளை திங்கள்கிழமை (நவம்பர் 14) அறிவித்துள்ளது. இதில் 25 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதும், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதும், பயிற்சியாளர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கணை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விளையாட்டுத் துறையில், மிகவும் உயரிய விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது டேபிள்டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தடகளத்தில் பூனியா, பேட்மிண்டனில் லக்‌ஷயா சென், பினாய் ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் சாதனையாளர் விருது கிர்க்கெட் வீரர் தினேஷ் ஜவஹர், கால்பந்து வீரர் பிமல் பிரஃபுல்லா கோஷ், மல்யுத்தம் போட்டியில் ராஜ்சிங் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரா-ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டத்தில் 3 தங்கப் பதக்கங்களைக் குவித்த -

17 வயதே ஆன மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவி ஜெர்லின் அனிகாவுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனா விருந்து மொத்தம் 25 வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. துரோணாச்சாரியா விருது 4 பேருக்கும், தயாந்த் சந்த் விருது 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கான இந்த தேசிய விருதை நவம்பர் 30-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவரும் அனுபவ டேபிள் டென்னிஸ் வீரருமான சரத் கமலுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை வரும் 30-ம் தேதி குடியரசுத் தலைவரிடமிருந்து அவர் பெற உள்ளார்.

மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், கேல் ரத்னா விருது பெற்றுள்ள சரத் கமல் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து கூறியிருப்பதாவது: “#B2022-இல் இந்தியாவுக்கு 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்து அசத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் கமல், அவர்கள் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்குத் தேர்வாகியுள்ளதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.

அர்ஜுனா விருதுக்குத் தேர்வாகியுள்ள இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகியோருக்கும் எனது பாராட்டுகள்.

தகுதிவாய்ந்த மூவருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல திறமையாளர்கள் மின்ன ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும்!

பிரேசிலில் நடைபெற்ற பாரா-ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டத்தில் 3 தங்கப் பதக்கங்களைக் குவித்த -

17 வயதே ஆன மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா அர்ஜுனா விருது 2022-க்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதிலேயே இத்தகைய அங்கீகாரம் பெற்றுள்ள அவருக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Sports Arjuna Awards
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment