விராட் கோலியை மிஞ்சும் ரன் மெஷின் : விரைவில் இந்திய அணியில் இடம்!

தற்போது நடந்து வரும் U-19 உலகக்கோப்பை தொடரில், நான்கு போட்டியில் ஆடியுள்ள ஷுப்மன் கில் அடித்துள்ள மொத்த ரன்கள் 341

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்திய அணியில் ‘ரன் மெஷின்’ என்று வர்ணிக்கப்படும் வீரர்கள் இடம் பெறுவார்கள். சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என ஒவ்வொரு தலைமுறையிலும் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

தற்போது அடுத்த தலைமுறைக்கான ‘ரன் மெஷின்’ உருவாகிவிட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது, இந்த வீரரை பார்க்கும் பொழுது.

ஷுப்மன் கில்…. பஞ்சாபை சேர்ந்த 18 வயதே ஆன இந்த வீரர் தற்போது இந்திய U-19 அணியில் ஆடி வருகிறார். 2017-18 ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணிக்காக முதன் முதலாக களம் கண்ட ஷுப்மன் கில், தனது இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்தார்.

இது ஒரு பெரிய விஷயமா-னு கேட்குறீங்களா? U-19 அணிக்காக இவர் இதுவரை மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் இவர் அடித்துள்ள மொத்த ரன்கள் எவ்வளவு தெரியுமா? 1180. இவரது ஆவரேஜ் 118.0. ஸ்டிரைக் ரேட் 103.23. நான்கு சதங்கள், ஆறு அரைசதங்கள்.

தற்போது நடந்து வரும் U-19 உலகக்கோப்பை தொடரில், நான்கு போட்டியில் ஆடியுள்ள ஷுப்மன் கில் அடித்துள்ள ரன்கள் 63, 90*, 86, 102* . மொத்தம் 341. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இந்த இளம் வீரரை 1.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

மிக விரைவில், இந்திய சீனியர் அணியில் இவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close