Ravichandran-ashwin | rajini-kanth | ms-dhoni: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 10 அணிகள் களமாடியுள்ள இந்த தொடரில் இந்திய அணி அதன் தொடக்கப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை நாளை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதற்காக நேற்று முன்தினம் முதல் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ரஜினியின் பட பாடல்களுக்கும் சி.எஸ்.கே கேப்டன் தோனிக்கும் இடையேயான உள்ள கவர்ச்சிகரமான ஒற்றுமை குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டியின் போது, சென்னை ரசிகர்கள் தோனிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், பின்னணி இசை போன்ற ரஜினியின் திரைப்படங்களில் உள்ள விஷயங்களை அவர் வெளிப்படுத்தினார்.
சமீபத்தில் பி.சி.சி.ஐ வெளியிட்ட ஒரு வீடியோவில், ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் சென்னையில் கற்றுக்கொள்வதற்காக சில தமிழ் லோக்கல் வார்த்தைகளை குறிப்பிட்டார். அவர் "செம்ம காஜி", "மரண மாஸ்" மற்றும் "வேறா மாறி" ஆகிய வார்த்தைகளை குறிப்பிட்டு இருந்தார்.
தோனி-ரஜினிகாந்த் தொடர்பு பற்றி கூறுகையில், “மரண மாஸ் வார்த்தை தலைவர் ரஜினிகாந்துக்கு பொருத்தமானது. அதைத்தான் தற்போது கிரிக்கெட்டில் ரசிகர்கள் கொண்டு வந்துள்ளார்கள். ரஜினிகாந்தின் படங்கள் மற்றும் அவருக்கான பிரமாண்ட பேக்ரவுண்ட் மியூசிக் எதுவாக இருந்தாலும், அடுத்த வருடம் அதை எம்.எஸ் தோனிக்காகப் போடுவார்கள். மரண மாஸ் என்பது லீக்கிற்கு அப்பாற்பட்ட ஒன்று." என்று கூறினார்.
மேலும், அஸ்வின் அந்த வீடியோவில் சென்னையின் கடற்கரை பீச்கள், உள்ளூர் டீக்கடைகள் மற்றும் சத்யம் திரையரங்கம் ஆகியவற்றை சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய மூன்று இடங்களாக தேர்ந்தெடுத்தார். நகரத்தில் முயற்சி செய்ய வேண்டிய மூன்று உணவுப் பொருட்களைப் பற்றி கூறுகையில், மசாலா தோசை, இளநீர் பாயசம், பொங்கல் போன்றவற்றை அவர் குறிப்பிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“