Ashwin’s Mankad wicket compared with Corona : கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் அஷ்வின் மன்கட் முறையில் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்க வைத்தார். கடந்த ஆண்டு இதே நாளில் அந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இதனை நினைவு கூறும் விதமாக பலரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் விக்கெட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், கொரோனாவால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க இன்று அஷ்வின் மீம் மெட்டிரியலாக மாறியுள்ளார். வீட்டில் இருந்து வெளியே வர கூடாது, பொது இடங்களில் கூடக்கூடாது, பொது போக்குவரத்தினை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்கட் விக்கெட்டினை நியாபகப்படுத்தி, அவசரப்பட்டு வீட்டைவிட்டு வெளியே போனா, அவுட் ஆகிருவீங்க. அதாவது கொரோனாவுக்கு ஆளாகிருவிங்க என்று கிரிக்கெட் ரசிகர்கள் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 பேரை தாண்டியுள்ளது. மகாராஷ்ட்ரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இந்நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்க : உபதேசமெல்லாம் ஊருக்கு தானா முதல்வரே? ராமர் சிலையை வைக்க நல்ல நாள் பார்த்த யோகி…