Advertisment

பவன் ஷெராவத்-ன் 'சிங்கப் பாய்ச்சல்'... ஆசிய கபடியில் கோப்பை வெல்ல உதவுமா?

சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துகிறார் பவன் ஷெராவத். அவரு க்கு 'ஹாய்-ஃப்ளையர்' என்ற செல்லப்பெயரும் உண்டு.

author-image
Martin Jeyaraj
New Update
Asian Games: India  kabaddi Pawan Sehrawat

கபடி ரசிகர்களுக்கு பவனிடம் மிகவும் பிடித்தது அவரது ரெய்டிங் தான். களத்தில் சாதுரியமாக கபடி ஆடும் அவர் அசத்தலாக புள்ளிகளை அள்ளி விடுவார்.

Pro-kabaddi | asian-games: இந்தியா கபடி அணியின் கேப்டனாக வலம் வருபவர் பவன் ஷெராவத். புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடரில் நட்சத்திர அவதாரம் எடுத்த இவர் 105 பி.கே.எல் போட்டிகளில் 987 புள்ளிகளைப் பெற்றவராக உள்ளார். பெங்களூரு புல்ஸ் அணியின் முன்னணி வீரராக இருந்த இவரை தமிழ் தலைவாஸ் அணி கடந்த சீசனில் 2.26 கோடிக்கு வாங்கியது. ஆனால், தொடக்க ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்தே வெளியேறும் சூழல் உருவானது. 

Advertisment

இதன்பிறகு தனது உடற்தகுதியில் அயராது உழைத்த பவன் ஷெராவத் இந்த நடக்கவுள்ள பி.கே.எல் தொடருக்காக மிகத் தீவிரமாக தயாராகி வருகிறார். ஏலத்தில் அவரை வசப்படுத்த பல அணிகளும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பவன் ஷெராவத் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியை வழிநடத்தினார். அவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 8 முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

ஈரான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 42-32 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி 10 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வழக்கம் போல் கேப்டன் பவன் ஷெராவத் அசத்தலாக விளையாடி இருந்தார். இந்த நிலையில், தற்போது சீனாவின் ஹாங்சோ நகரில் நாளை முதல் தொடங்கும் ஆசிய விளையாட்டுக்கான இந்திய கபடி அணியை பவன் ஷெராவத் வழிநடத்துகிறார். அவரது தலைமையிலான இந்திய அணி மீண்டும் வாகை சூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Indian kabaddi team captain Pawan Sehrawat latest interview in tamil

'சிங்கப் பாய்ச்சல்'

கபடி ரசிகர்களுக்கு பவனிடம் மிகவும் பிடித்தது அவரது ரெய்டிங் தான். களத்தில் சாதுரியமாக கபடி ஆடும் அவர் அசத்தலாக புள்ளிகளை அள்ளி விடுவார். அவர் அடிக்கும் பாய்ச்சலை காண இரண்டு கண்கள் நிச்சயம் போதாதது. அந்த அளவுக்கு சிங்கம் போல் பாய்வார். குறிப்பாக, எதிரணி வீரரை அவுட் செய்த பிறகு, தொடு கோட்டை தொட வரும் அவரை வழிமறைக்கும் வீரரை தாண்டி (ஆள் அடி உயரம் தாண்டி) ஜம் அடிப்பார் பவன். அப்படியே அலேக்காக எதிரணி வீரரின் தலையை தாண்டி பாயும் அவர், ஒரு பல்டி அடித்து தொடு கோட்டை தொட்டு விடுவார். 

பவன் அடிக்கும் ஜம்பை ரசிகர்களும், கபடி ஆர்வலர்களும் லயன் ஜம்ப் (Lion Jump) என்பார்கள், அதாவது 'சிங்கப் பாய்ச்சல்' என்பார்கள். அவருக்கு 'ஹாய்-ஃப்ளையர்' என்ற செல்லப்பெயரும் உண்டு. ஐந்து அடிக்கு மேல் குதித்து (அல்லது சில நேரங்களில் ஆறு கூட) எதிரணி வீரர்களிடம் இருந்து பிடிபடாமல் தப்பி செல்வார் பவன். 

அவர் அந்த ஜம்பை செயல்படுத்தும்போது, ​​​​எதிரணி டிஃபெண்டர் தோள்களின் மீது தனது கைகளை வைத்து தனது சமநிலையை பராமரிக்கிறார். அவருக்கான உந்துதலும் அவரிடம் இருந்து கிடைக்கிறது. கீழே லேண்டிங் செய்யும் போது, கால் தசைகளில் இருந்து பெறப்பட்ட சக்தியைக் கொண்டு தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறார். ஆனால், மிகவும் கடினமான ஒன்றாகும். ஏன்னென்றால், கால் சற்று விலகினால் கூட கால்பிடிப்பு அல்லது பிறழ்வு ஏற்பட்டு விடும். 

அவர் குதிப்பது மட்டுமல்ல, குதித்த பிறகு தரையிறங்குவதும் சமமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. "குதிக்கும் போது வலுவான தசைகள் மட்டும் அல்ல. நீங்கள் தரையிறங்கும் போது உங்கள் தோள்களில் அல்லது கைகளில் விழுந்தால், அது வலிக்கும். எனவே குதித்த பிறகு தரையிறக்கம் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடலின் மேல் பகுதியும் வலுவாக இருக்க வேண்டும்,” என்று பவன் ஷெராவத் தனது லயன் ஜம்ப் பற்றி  கூறினார்

 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தும் கேப்டன் பவன் ஷெராவத் மற்றும் அவரது லயன் ஜம்ப் கோப்பை மீண்டும் வசப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 7 தங்கப் பதக்கங்களை வென்ற பிறகு, ஜகார்த்தாவில் நடந்த கடைசி ஆசிய  விளையாட்டு அரையிறுதியில் ஈரானிடம் இந்தியா அதிர்ச்சிகரமான தோல்வி கண்டது குறிபிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Pro Kabaddi Asian Games
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment