ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் பேருந்து மீது கல்வீச்சு... பாதுகாப்பை குறைகூறுவது சரியாகாது: விளையாட்டுத்துறை அமைச்சர்

ஆஸ்திரேலிய வீரர்களின் பேருந்து மீது நடத்தப்பட்டுள்ள கல்வீச்சு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, பாதுகாப்பை குறைகூறுவதென்பது சரியானதாது

கவுகாத்தியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் பேருந்து மீது நடத்தப்பட்டுள்ள கல்வீச்சு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, பாதுகாப்பை குறைகூறுவதென்பது சரியானதாது என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய கிரிக்கெட் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முன்னதாக நடந்து முடிந்த ஒருநாள் போட்டித்தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து,டி20 தொடர் தொடங்கிய நிலையில், முதல் டி20-யில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியதனால், ஆஸ்திரேலிய அணி எளிதாக வென்றது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றத போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் மட்டும் எடுத்தது. ஆஸி., அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெஹ்ரெண்டோர்ஃப், இந்திய அணியின் ரோஹித், கோலி, மனீஷ் பாண்டே, தவான் ஆகிய நான்கு முன்னணி வீரர்களையும் ஒற்றை இலக்கில் அவுட்டாக்கி அணியை நிலைகுலைய வைத்தார்.

குறிப்பாக, கேப்டன் கோலியை பூஜ்யத்தில் வெளியேற்றினார். இதனால், இந்திய அணியால் 118 ரன்களே எடுக்க முடிந்தது. எளிதான இலக்கை துரத்தி ஆஸி., 15.3-வது ஓவரிலேயே இலக்கை எட்டியது. இதனால், 3 போட்டிகள் தொண்ட டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் இருஅணிகளும் சமநிலையில் உள்ளது. 3-வது போட்டியில் வெற்றிபெறும் தொடரைக் கைப்பற்றும் என்பதால், ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2-வது டி20 போட்டியில் வெற்றிபெற்ற ஆஸ்திரலிய அணி வீரர்கள், தங்கள் பேருந்தில் ஏறி ஹோட்டலுக்கு செல்லத் தயாரானார்கள். அப்போது, அந்த பேருந்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால், பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதனால் பீதிக்குள்ளான ஆஸ்திரேலிய வீரர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செதுள் போலீஸார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பேருந்து தாக்கப்பட்டது தொடர்பான புகைப்படத்தை ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கவுகாத்தில், சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்ததால், மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பியது. 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேற்றைய ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்தனர். பல வருடங்களுக்கு பிறகு தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் நாயகர்கள் தங்கள் மண்ணில் விளையாடுவதை பார்க்க மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக இந்திய அணி நேற்று மிகவும் மோசமாக விளையாடி தோற்றதால் அவர்கள் மிகுந்த அதிருப்திக்கு ஆளாகினர்.

இந்த நிலையில், கவுகாத்தியில் ஆஸ்திரேலிய வீரர்களின் பேருந்து மீது நடத்தப்பட்டுள்ள கல்வீச்சு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, பாதுகாப்பை குறைகூறுவதென்பது சரியானதாகாது என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ட்விட்டர் தனது பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவிற்கு வருகைதரும் வீரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களின் கடமையாகும். இந்த விவகாரம் தொடர்பாக அஸ்ஸாம் மாநில முதலமைச்சரிடம் தொடர்பு கொண்டு பேசினேன். வீரர்களின் தனிநபர் பாதுகாப்பு மற்றும் அணியின் பாதுகாப்பு என்பது என்பது மிக முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close