scorecardresearch

வெற்றி யாருக்கு: 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 98/2

australia-vs-india-3rd-test-sydney match updates : ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 312/6d ரன்னுக்கு டிக்ளர் செய்தது.

வெற்றி யாருக்கு: 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 98/2

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4வது நாளான, இன்று ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 312/6d ரன்னுக்கு டிக்ளர் செய்தது.

இதனையடுத்து, 407 ரன் என்ற வெற்றி இலக்கோடு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 70 ரன் குவித்தது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவாது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 7ம் தேதி  சிட்னியில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 338 ரனனுக்கு ஆட்டமிழந்தது. இந்த அணியின் ஸ்மித் ஆபாரமாக ஆடி 131 ரன் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 244 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. இந்திய அணியில் புஜாரா, சுப்மான் கில் அதிகபட்சமாக  அரைசதம் அடித்தனர். 2வது இன்னிங்ஸில் மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய பந்தில் ரவிந்திர ஜடேஜாவின் இடது கையில் படுகாயம் ஏற்பட்டது. ஜடேஜாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரின் இடதுகை பெருவிரலில் எழும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, ஜடேஜா இரண்டவாது  இன்னிங்ஸில்  பந்து வீசவில்லை. மேலும், இந்தியாவின் இரண்டாவது இன்னிக்ஸில் பேட்டிங் செய்வாரா? என்பதும் கேள்வி குறியாக உள்ளது.

நான்கு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Australia vs india 3rd test sydney australia set 407 jadeja injury