3-வது டெஸ்ட்டில் ஜடேஜாவுக்கு மாற்று வீரர் யார்?

3-வது டெஸ்ட் போட்டியில் ரவிந்திர ஜடேஜாவுக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான அக்‌ஷர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

By: Updated: August 9, 2017, 02:55:11 PM

இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ரவிந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்‌ஷர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஓருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. தற்போதைய நிலையில், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. அந்த போட்டியில் அஷ்வின், ஜடேஜா தலா 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

இந்த நிலையில், ஐசிசியின் விதிமுறைகளை மீறும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, ஜடேஜாவிற்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இதனால், பல்லேகல்லேவில் வரும் 12-ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஜடேஜா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், 58-வது ஓவரை ஜடேஜா வீசினார். அப்போது கருணரத்னே அடித்த பந்தை தடுத்த ஜடேஜா, கருணரத்னே கிரீஸிற்குள் நின்றுக் கொண்டிருந்த போதே, அவரை நோக்கி வேகமாக வீசினார். இதையடுத்தே, ஜடேஜா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதாக, ஜடேஜாவிற்கு போட்டியின் ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஐசிசி-யின் 2.2.11 விதிப்படி, அவருக்கு மூன்று தகுதியிழப்பு புள்ளிகளும் அளிக்கப்பட்டது.

தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், ஜடேஜா மீது இதே புகார் எழுந்த நிலையில், தற்போது அவருக்கு மேலும் 3 தகுதியிழப்பு புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 6 புள்ளிகள் சேர்ந்ததால், ஐசிசியின் 2.2.8 விதிப்படி, ஜடேஜாவிற்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து அடுத்த 24 மாதத்திற்குள் மீண்டும், ஜடேஜா மீது இதே புகார் எழுந்தால், அவருக்கு மேலும் 4 தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

Axar Patel,

இந்த நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் ரவிந்திர ஜடேஜாவுக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான அக்‌ஷர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ரங்கனா ஹெராத் விலகல்

இலங்கை சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் முதுகுவலி காரணமாக 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புஷ்பகுமாரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Axar patel to replace ravindra jadeja for 3rd test indvssl

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X