Babar Azam 'New Mr. 360' post, irks Suryakumar Yadav fans Tamil News - பாபர் அசாம் 'புதிய மிஸ்டர் 360' பதிவு: வறுத்தெடுக்கும் சூரியகுமார் ரசிகர்கள் | Indian Express Tamil

பாபர் அசாம் ‘புதிய மிஸ்டர் 360’ பதிவு: வறுத்தெடுக்கும் சூரியகுமார் ரசிகர்கள்

இந்திய அதிரடி வீரர் சூரியகுமாரின் ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டையும் அதன் கேப்டன் பாபர் அசாமை சமூக ஊடகங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Babar Azam 'New Mr. 360' post, irks Suryakumar Yadav fans Tamil News
Cricket Pakistan's official handle shared a video with the caption 'Babar Azam, the new Mr 360'

Suryakumar Yadav and Babar Azam Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் சூரியகுமார் யாதவ். இவர் தற்போது உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு இவரின் சமீபத்திய பேட்டிங் உள்ளது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் டாப் ஆடரிலும், ஹர்திக் பாண்டியா ஃபினிஷராகவும் உள்ள நிலையில், சூரியகுமார் மிடில் -ஆடரில் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.

சூரியகுமார் இந்தியாவின் ‘மிஸ்டர் 360’ என்ற பெருமையை பெற்ற வீரராகவும் உள்ளார். இந்த குறுகிய காலத்தில் அவர் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் களத்தில் நுழையும் போதும் ரசிகர்கள் அவரது பெயரைக் குறிப்பிட்டு கூச்சலிடுகின்றனர். இந்தியாவுக்காக அறிமுகமாகி 2 ஆண்டுகளுக்குள் சூரியகுமார் அந்த நிலையை எட்டியுள்ளார். தற்போது சூரியகுமார் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்துகொண்டுள்ளார்.

பாபர் அசாம் ‘புதிய மிஸ்டர் 360’ பதிவு: வறுத்தெடுக்கும் சூரியகுமார் ரசிகர்கள்

இந்நிலையில், இந்திய அதிரடி வீரர் சூரியகுமாரின் ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டையும் அதன் கேப்டன் பாபர் அசாமை சமூக ஊடகங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

கிரிக்கெட் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு ‘பாபர் அசாம், புதிய மிஸ்டர் 360’ என்ற கேப்ஷனை பதிவிட்டு பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், பாபர் அசாம் சில வழக்கத்திற்கு மாறான ஷாட்களை விளையாடி வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்கிறார். ஃபைன் லெக்கில் சில ஸ்கூப்களையும் இன்னும் சிலவற்றையும் விளையாடுவதைக் காணலாம்.

இந்த நிலையில், அந்தப் பதிவில் ‘பாபர் அசாம், புதிய மிஸ்டர் 360’ என்ற கேப்ஷன் இட்டு பதிவிட்டது சூரியகுமார் ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது. மேலும், அந்த வீடியோவின் கமெண்ட்டில் அவர்கள் தீட்டி தீர்த்து வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Babar azam new mr 360 post irks suryakumar yadav fans tamil news