இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த்!

இந்தோனேசியா ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் பிரனாய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில், ஜப்பானின் காஜூமாசா சகாயுடன் பிரனாய் மோதினார். ஆனால், 21-17, 26-28, 18-21 என்ற செட் கணக்கில் பிரனாய் தோல்வி அடைந்தார்.

இரண்டாவதாக நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்கொரிய வீரர் சோன் வான் ஹோவை எதிர்த்து விளையாடிய ஸ்ரீகாந்த், 21-15, 14-21, 24-22 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

×Close
×Close