Advertisment

வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய பைச்சுங் பூட்டியா : கால்பந்து வீரர் சந்தேஷ் ஜிங்கன் நெகிழ்ச்சி

author-image
D. Elayaraja
New Update
வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய பைச்சுங் பூட்டியா : கால்பந்து வீரர் சந்தேஷ் ஜிங்கன் நெகிழ்ச்சி

இந்திய கால்பந்து அணியின் நடுகள வீரர் சந்தேஷ் ஜிங்கன், தேசிய அணிக்கும், ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், ஏ.டி.கே. மோஹுன் பாகன் அணிக்கும் மிகவும் நம்பகமான வீரராக உள்ளார். இந்நிலையில் தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து பகிர்ந்துகொண்ட அவர்,  2011 ம் ஆண்டு, யுனைடெட் சிக்கிம் அணியில், தனக்கு எப்படி இடம் கிடைத்தது என்பது குறித்து சுவராஷ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

Advertisment

இது குறித்து அவர் கூறுகையில், யுனைடெட் சிக்கிம் அணியில் லீக் சுற்றின் 2 வது பிரிவில் விளையாடினேன். அப்போது நான் மெலிதாக இருந்ததால் எனது உடலில’ பல தடிப்புகள் இருந்த்து. இதனால் என் வழக்கமான ஆட்டத்தை விளையாட முடியவில்லை. அப்போது என்ணை அழைத்த பைச்சுங் பூட்டியா யுனைடெட் சிக்கிமில் என்னை பார்க்க விரும்புகிறார்கள் என்று கூறினார். அது எனக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது.

"நான் ஒன்றரை முதல் இரண்டு மாதங்கள் வரை எனது ஆட்ட திறமையை கான்பிக்கவேண்டி இருந்தது. இறுதியாக, பைச்சுங் “பாய்” எனக்கு நன்மதிப்பை வழங்கி,  பந்தை கைவிடாது எப்படி களத்தில் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையான விஷயங்கள் பற்றி கூறினார். மேலும் எனக்கு ஒருபோதும் அகாடமி பின்னணி இல்லை, நான் ஒரு தெரு கால்பந்து வீரராக இருந்தேன், ”என்று அவர் கூறினார்.

பூட்டியாவால் சிக்கிமுக்கு அழைக்கப்படுவதற்கு முன்பு நான் கொல்கத்தா கிளப்புகளுடன் சோதனை ஆட்டத்தில் வெற்றிகரமாக செயல்பாடுகளை கொடுத்திருந்தேன் என  ஜிங்கன் நினைவு கூர்ந்தார். பூட்டியா அப்போது யுனைடெட் சிக்கிம் கிளப்பின் இணை உரிமையாளராக இருந்தார். யுனைடெட் சிக்கிமுடன் இணைந்து இந்திய கால்பந்து அணிக்குள் நுழைந்த ஜிங்கன் 2014 ஆண்டு, ஐ.எஸ்.எல். இல் கேரள பிளாஸ்டர்ஸால் தேர்வு செய்யப்பட்டார். 27 வயதான அவர் தேசிய அணியுடன் 36 தொப்பிகளைப் பெற்றார்.

 

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment