Advertisment

பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் வழக்கு: மல்யுத்த கூட்டமைப்புக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்துக்கு நேரடி அனுமதி அளித்ததை எதிர்த்த வழக்கில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இன்றே பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Bajrang Punia - Vinesh Phogat Asian Games: Delhi High Court seeks WFI response Tamil News

பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் இருவரும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்-கிற்கு எதிரான போராட்டத்தை ஒரு மாதத்திற்கு மேலாக முன்னின்று நடத்தியவர்கள்.

News about Vinesh Phogat, Asian Games and Bajrang Punia in Tamil: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரரான பஜ்ரங் பூனியா (65 கிலோ), காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் (53 கிலோ) ஆகியோருக்கு தகுதி தேர்வு போட்டியில் இருந்து விலக்கு அளித்து ஆசிய விளையாட்டு போட்டியில் நேரடியாக பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி அனுமதி அளித்தது.

Advertisment

ஆனால் அவர்களுக்கு ஆசிய விளையாட்டில் கலந்து கொள்ள சிறப்பு சலுகை வழங்கப்பட்டதற்கு சக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இந்த சிறப்பு அனுமதியை எதிர்த்து 20 வயதுக்கு உட்பட்ட உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரரான அஜீத் கல்கால், ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் கைப்பற்றிய வீராங்கனையான அந்திம் பன்ஹால் சார்பில் கூட்டாக டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் 'எந்தவொரு வீரருக்கும் மல்யுத்த அணிக்கான தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கூடாது. தகுதி தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும். தகுதி தேர்வுக்கான போட்டியை முழுமையாக வீடியோ எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் "தேர்வுக்கான அடிப்படை நியாயமானது மற்றும் சரியானது என்றால், அது விஷயத்தின் முடிவு" என்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) இன்றே பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணை நாளை வெள்ளிக்கிழமை நடக்கும் என்றும் உத்தரவிட்டார்.

பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் இருவரும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்-கிற்கு எதிரான போராட்டத்தை ஒரு மாதத்திற்கு மேலாக முன்னின்று நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Delhi High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment