ANBARASAN GNANAMANI
2014 நவம்பர் மாதம், சக வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து அடிப்பட்டு இறந்தற்காக, கேப்டன் மைக்கேல் கிளார்க், செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார். அதன் பின் நான்கு வருடங்கள் கழித்து, மீண்டும் ஒரு ஆஸ்திரேலிய கேப்டன் செய்திளார்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். ஆனால், இம்முறை இறந்தது வீரர் அல்ல... ஆஸ்திரேலிய கிரிக்கெட் மீதான கெளரவம். ஒட்டுமொத்த கிரிக்கெட் மீதான நம்பிக்கை!.
கேப்டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், தான் மறைத்து வைத்திருந்த மர்மப் பொருள் கொண்டு, ஆஸ்திரேலிய பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்றார் போல் பந்தை சேதப்படுத்தினர். இதை அப்படியே கேமரா படம் பிடிக்க, "What the f*** is going on? Find out what the f*** is going on?" என்று பயிற்சியாளர் லீமன் ஆத்திரப்பட, போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சிக்கு ஆளானர்கள்.
அதன்பின், துணை கேப்டன் வார்னரின் ஐடியாவோடு, கேப்டன் ஸ்மித்தின் துணையோடு பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது உறுதியானது. ஸ்மித்துக்கும், வார்னருக்கும் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்க, சீனியர்கள் தவறு செய்ய சொன்னதை ஒப்புக்கொண்டு செய்த இளம் வீரர் பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.
நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலிய அணி ஜோகன்னஸ்பெர்க் சென்றுவிட்ட நிலையில், இந்த மூன்று வீரரையும் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டது ஆஸி., நிர்வாகம்.
இந்த நிலையில், தண்டனைக்கு பிறகு முதன் முதலாக ஸ்மித் செய்தியாளர்களிடம் கதறி அழுது பேட்டி கொடுத்தார். அவர் பேசுகையில், "என் மீது அதிருப்தியும், கோபமும் கொண்டுள்ள எனது அணியின் சக வீரர்களுக்கும், ஆஸ்திரேலிய மக்களுக்கும் மற்றும் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது, 'என்னை மன்னித்துவிடுங்கள்!'. நான் செய்த தவறையும், அதனால் ஏற்பட்ட விளைவையும் நான் நிச்சயம் மாற்றுவேன்.
இந்த சம்பவம் மூலம் ஒரு நல்லது நடந்திருக்குமெனில், மற்றவர்களுக்கு ஒரு நல்ல பாடம் கிடைத்துள்ளது. நானும் திருந்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நினைத்து என் வாழ்க்கை முழுவதும் நான் வருத்தப்படுவேன் என்பது எனக்கு தெரியும். நாம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, நான் இழந்த மரியாதையையும், மன்னிப்பையும் பெறுவேன்.
இந்த சம்பவத்திற்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் என்கிற முறையில், அனைத்திற்கும் நான்தான் பொறுப்பு. உலகில் கிரிக்கெட் என்பது மிகப்பெரிய விளையாட்டு. இதுதான் எனது வாழ்க்கை. எனக்கு மீண்டும் அது கிடைக்கும் என நம்புகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் முற்றிலும் அழிந்துவிட்டேன்" என்றார்.
செய்தியாளர்கள் முன்பு உரையாற்றும் போது, ஸ்மித் அடிக்கடி பேச முடியாமல், சிறு பிள்ளையைப் போன்று கண்ணீர்விட்டு அழுதார். அப்போது அவரது தந்தை பீட்டர் அருகில் நின்றுக் கொண்டு, மகனை தேற்றினார்.
மிகப்பெரிய கிரிக்கெட் வீரர், தான் செய்த தவறுக்காக கண்ணீர் விட்டு பல பேர் முன்னிலையில் அழுததை பார்க்கவே ஒரு கிரிக்கெட் ரசிகனாக கடினமாகத் தான் இருந்தது.
பொதுவாக, ஸ்மித் நல்ல மனிதர், நல்ல இளைஞர், நல்ல வீரர், நல்ல மகன். ஆனால், தவறான ஒரு முடிவை தேர்வு செய்ததன் விளைவு, இன்று அவர் அனைவரின் முன் கண்ணீர் விட நேர்ந்துள்ளது. ஆனால், இதற்கு பிறகு நிச்சயம், இதை விட ஒரு நல்ல தலைவனாக, ஒரு நல்ல வீரராக களத்திற்கு திரும்புவார் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.
Heartbreaking. Steve Smith has broken down delivering a message to young Aussie cricket fans. pic.twitter.com/l14AsvAhXz
— cricket.com.au (@CricketAus) 29 March 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.