Advertisment

India Tour of Australia: தல ஈஸ் பேக்... டி20 தொடரில் மீண்டும் இடம் பிடித்த தோனி

BCCI Announced Indian Team Squad for Australia ODIs: தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தோனிக்கு ஏன் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது?

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian Cricket Team in Australia ODI and NZ T20

Indian Cricket Team in Australia ODI and NZ T20

BCCI Announced Indian Team Squad for Australia ODI: ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 1-1 என சமநிலையில் இருக்கும் இத்தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி, மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

விராட் கோலி (C), ரோஹித் ஷர்மா (vc), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், மகேந்திர சிங் தோனி (WK), ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, கலீல் அஹ்மத், முகமது ஷமி.  

அதேபோல், நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி (C), ரோஹித் ஷர்மா (vc), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், மகேந்திர சிங் தோனி (WK), ஹர்திக் பாண்ட்யா, க்ருனல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, கலீல் அஹ்மத்.

இவ்விரு தொடரிலும் தோனி இடம்பெற்றுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

எல்லாம் சரி.... தல தோனி மீண்டும் அணிக்கு திரும்பியதெல்லாம் ஹேப்பி தான்..  ஆனால், ஆஸ்திரேலிய டி20 தொடரில் தோனியை நீக்கிவிட்டு, நியூசிலாந்து டி20 தொடரில் அவரை சேர்க்க வேண்டிய காரணம் என்ன? அதுவும், பண்ட் இருக்கும் போதே, தோனியை தேர்வு செய்ததன் காரணம் என்ன?

2020ல் ஆஸ்திரேலியாவில் தான் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ளது. அதை முன்னிட்டே நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தோனி நீக்கப்பட்டு, ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தோனிக்கு ஏன் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது?

டி20 உலகக் கோப்பையை ஃபோகஸ் செய்கிறீர்கள் என்றால், ரிஷப் பண்ட்டை உட்காரச் செய்து தோனியை பேட் செய்ய வைத்தீர்கள் என்றால், அதனால் அணிக்கு என்ன பலன்?

அப்படியில்லை எனில், நியூசிலாந்து தொடரில் தோனியை பெஞ்ச்சில் உட்கார வைக்கப் போகிறீர்களா? அதற்கு ஏன் அவரைத் தேர்வு செய்ய வேண்டும்?

என்ன இருந்தாலும், தல என்ட்ரி எப்போதுமே மாஸ் தான்!

மேலும் படிக்க - மெல்போர்ன் டெஸ்ட் போட்டி: ஆஸி., அணியில் 7 வயது லெக் ஸ்பின்னர் சேர்ப்பு! விராட் கோலி ஆச்சர்யம்

India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment