மகேந்திர சிங் தோனியை டாப் கிரேடில் இருந்து தரமிறக்கிய பிசிசிஐ! காரணம் என்ன தெரியுமா?

பிசிசிஐ, வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது

வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதில் முதன் முறையாக, ஆண்கள் கிரிக்கெட்டில் A+ எனும் கிரேட் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக A,B,C என்ற மூன்று கிரேட் மட்டுமே இருக்கும். அதில், A கிரேடில் உள்ளவர்களின் ஊதியம் ஆண்டுக்கு 2 கோடியாகவும், B கிரேடில் உள்ளவர்களின் ஊதியம் 1 கோடியாகவும், C கிரேடில் உள்ளவர்களின் ஊதியம் 50 லட்சமாகவும் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த ஊதிய ஒப்பந்தம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு காலாவதியானது. இதைத் தொடர்ந்து, வீரர்களின் ஊதிய ஒப்பந்தத்தை அதிகரிக்க வேண்டும் என கேப்டன் விராட் கோலி வலியுறுத்தினார். ரவி சாஸ்திரி அதை வழி மொழிந்தார்.

இந்தநிலையில், இன்று பிசிசிஐ, வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. அதன்படி A+, A, B, C எனும் நான்கு கிரேடுகளில் வீரர்களை தரம் பிரித்துள்ளது பிசிசிஐ.

A+ கிரேட் வீரர்களின் ஆண்டு ஊதியம் 7 கோடி.

A கிரேட் வீரர்களின் ஆண்டு ஊதியம் 5 கோடி.

B கிரேட் வீரர்களின் ஆண்டு ஊதியம் 3 கோடி.

C கிரேட் வீரர்களின் ஆண்டு ஊதியம் 1 கோடி.

A+ கிரேட்

விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், புவனேஷ் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா.

A கிரேட் 

மகேந்திர சிங் தோனி, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், சத்தீஸ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே, ரிதிமான் சாஹா.

B கிரேட் 

லோகேஷ் ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா, தினேஷ் கார்த்திக்.

C கிரேட் 

கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே, அக்சர் படேல், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல், ஜெயந்த் யாதவ்.

வீரர்களின் தரம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

பொதுவாக, பிசிசிஐ-க்காக அதிகளவு போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கே அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்களே டாப் பிரிவினில் இடம் பெறுவார்கள். அதனடிப்படையில், தோனி A+ கிரேடில் இருந்து தரம் இறக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டதால், பிசிசிஐ-யின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே அவர் ஆடி வருகிறார். இத்தனைக்கும் அவர் 2014ம் ஆண்டே, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதன்பிறகு மூன்று ஆண்டுகளுக்கும் பிசிசிஐ அவரை டாப் கிரேடிலேயே வைத்திருந்தது.

பெண்கள் கிரிக்கெட் ஊதியம்

இதேபோன்று பெண்கள் கிரிக்கெட்டிற்கான ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதில், கிரேட் A பிரிவில் உள்ள வீராங்கனைகளின் ஆண்டு ஊதியம் 50 லட்சமாகவும், B கிரேட் வீராங்கனைகளின் ஊதியம் 30 லட்சமாகவும், C கிரேட் வீராங்கனைகளின் ஊதியம் 10 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஊதியம் 200 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(எல்லாம் சரி! முகமது ஷமி பெயர் லிஸ்ட்ல இல்லாதத கவனிச்சீங்களா? ஏன்? யோசிங்க..யோசிங்க…)

நான் தகாத உறவு வைத்துள்ளேனா? மனைவியின் புகாரை மறுக்கும் முகமது ஷமி! – முழுவதும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close