புரோ கபடி லீக் தொடரில், நாக்பூரின் மான்கபூர் உள்அரங்கத்தில் இன்று நடைபெற்ற ‘பி பிரிவு’ போட்டியில், பெங்களூரு புல்ஸ் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி 31 – 25 எனும் புள்ளிக் கணக்கில் வென்றது.
பெங்கால் வீரர் ஜேங் கங் லீ, 7 முறை வெற்றிகரமாக ரெய்டு சென்று, மொத்தம் எட்டு புள்ளிகளை அணிக்கு பெற்றுத் தந்தார்.
ரெய்டு புள்ளிகளை பொறுத்தவரை, இரு அணிகளுக்கும் சரிசமமான அளவில் போட்டி இருந்தது. சொல்லப்போனால், பெங்களூரு அணியைவிட, ஒரு புள்ளி கூடுதலாக (15) பெங்கால் அணி பெற்றது. ஆனால், டேக்கில் புள்ளிகளைப் பொறுத்தவரை பெங்கால் 8 புள்ளிகள் மட்டுமே பெற்றது. பெங்களூரு புல்ஸ் 12 புள்ளிகளைப் பெற்றது.
மேலும், உதிரிகள் வகையில் பெங்களூரு 3 புள்ளிகளைப் பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக அஜய் குமார் எட்டு புள்ளிகள் வென்றார்.
இதன்மூலம் 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, 3 போட்டிகளில் வென்று 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பெங்கால் அணிக்கு இது முதல் தோல்வியாகும். இதனால், 11 புள்ளிகளுடன் அந்த அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Bengal warriors team face first loss in pro kabaddi league