ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இவற்றில் 9 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி, ஏறக்குறைய தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது எனலாம். பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் சமபலத்தில் இருக்கும் கொல்கத்தா, நிச்சயம் இறுதிப் போட்டிக்கும் முன்னேறும் என்பதில் ஐயமில்லை.
8 போட்டிகளில் ஆடி, 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்றிக்கும் மும்பை அணியும், கொல்கத்தாவிற்கு சற்றும் பலத்தில் குறைவில்லாத அணி என்றே கூறலாம். நடப்பு சீசனில் இவர்கள் இருவரும் மோதும் ஆட்டமே, ரசிகர்கள் மிகவும் விரும்பும் ஆட்டமாக இருக்கின்றது.
இதற்கு அடுத்த இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி, 9 போட்டிகளில் 5-ல் வெற்றிபெற்று 11 புள்ளிகள் பெற்றுள்ளது. பெங்களூருவிற்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டு டிராவானது. இதனால் ஒரு புள்ளி மட்டுமே இந்த அணிக்கு கிடைத்தது. இந்த அணியும் மும்பை மற்றும் கொல்கத்தாவிற்கு கடும் சவால் அளிக்கக் கூடிய திறமைப் பெற்றதுதான்.
இந்த 4-வது இடத்தைப் பிடிப்பதற்கு தான் மற்ற அணிகளுக்கு இடையே 'பாகுபலி' படத்தில் வரும் போர்க்காட்சிகளை விட, அதிக சண்டை நடக்கும் என தெரிகிறது. ஏனெனில், புள்ளிப்பட்டியலில் தற்போது 4-வது இடத்தில் புனே சூப்பர் ஜெயண்ட் அணி உள்ளது. 8 போட்டிகளில் ஆடியுள்ள இந்த அணி, 4 வெற்றி 4 தோல்விகள் பெற்றுள்ளது. இந்த அணிக்கு அடுத்த இடங்களில் இரு அணிகள் சம புள்ளிகளுடன் உள்ளன. அதாவது, குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் 8 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 5-வது மற்றும் 6-வது இடத்தில் உள்ளன.
இந்த மூன்று அணிகளுக்கு இடையே தான் 4-வது இடத்தை பிடிப்பதற்கான போர் நடக்கும் என தெரிகிறது. இதற்கடுத்து வரும் ஒவ்வொரு போட்டியும் இந்த மூன்று அணிகளுக்கும் மிக முக்கியம் வாய்ந்தவையாகும். இதை அவர்களும் அறியாமல் இல்லை. இதனால், நடப்பு ஐபிஎல் தொடரே இனிமேல் தான் மிகவும் விறுவிறுப்பாக இருக்கப் போகிறது.
பெங்களூருவில் நிலை? அவ்ளோதானா....?
இந்த நிலையில், இன்று புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இன்று மாலை 4 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. தற்போதுவரை 9 போட்டிகளில் ஆடியுள்ள பெங்களூரு, 2 வெற்றியை மட்டுமே பெற்று 7-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியையும் சேர்த்து இன்னும் 5 ஆட்டங்கள் மட்டுமே பெங்களூரு வசம் உள்ளது. இந்த 5 போட்டியையும் அந்த அணி வென்றாக வேண்டும். இதில் ஒரு போட்டியில் கூட தோற்றாலும் அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு முடிந்துவிடும்.
ஆக, இன்று புனேவிற்கு எதிரான போட்டியில் ஒருவேளை பெங்களூரு தோற்றால், நடப்பு ஐபிஎல்-ல் இருந்து வெளியேறும் முதல் அணி என்ற பெயரைப் பெற வேண்டியது வரும்.