பிரபல நிறுவனமான ஜே.கே டயர் நிறுவனம் மற்றும் எஃப்.எம்.எஸ்.சி.ஐ எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் உள்ள காரி மோட்டாரில் நடைபெற்ற இந்திய கார் பந்தய 2-வது நாளில் இந்திய ரேசிங் லீக் 4-வது போட்டியில் ரவுல் ஹைமன் கோவா ஏசஸ் அணி வெற்றி பெற்றது.
ஒவ்வொரு பிரிவிலும் 20 பேர் என பங்கேற்று போட்டிகள் நடத்தப்பட்ட சூழலில் வீரர்கள் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர். மேலும், 10 சுற்று முதல் 20 சுற்று என வெவ்வேறு வகையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் தேசிய அளவில் சிறந்த கார் பந்தய வீரர்கள் பலர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்
27-வது ஜே.கே டயரின் எஃப்.எம்.எஸ்.சி.ஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் பெங்களூர் டிரைவர் அணி வெற்றி பெற்று பெங்களூர் சேர்ந்த பந்தய வீரர்கள் வெற்றி பெற்றனர். ஃபார்முலா 4 பந்தயத்தில் வரிசையில் இடங்களை தக்க வைத்துக் கொண்டனர்.
மேலும், ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பையில் கோவையை சேர்ந்த ரோஹம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நவநீத் குமார் பந்தயத்தில் வெற்றி பெற்றனர்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“