Advertisment

நுபுர் நகருடன் நடந்த நிச்சயதார்த்தம் குறித்து சமூக தளங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ள புவனேஷ் குமார்!

தனது வருங்கால மனைவி குறித்து புவனேஷ் குமார் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில்....

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
நுபுர் நகருடன் நடந்த நிச்சயதார்த்தம் குறித்து சமூக தளங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ள புவனேஷ் குமார்!

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பவுலர் புவனேஷ் குமாருக்கும், நுபுர் நகர் என்பவருக்கும் நொய்டாவில் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இணையவுள்ள புது தம்பதியின் குடும்பத்தாரும், நெருங்கிய நண்பர்களுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த நிலையில், தனது வருங்கால மனைவி குறித்து புவனேஷ் குமார் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்வில் வேகமாக முன்னோக்கிச் செல்லவும், அற்புதமான வாழ்க்கை குறித்து கனவு காணவும் என்னை உந்திய, அந்த பழைய இனிமையான நினைவுகளை திரும்பிப் பார்க்க நான் பின்னோக்கி செல்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, புவனேஷ் குமாரின் தந்தை கிரண் பால் சிங் பேசுகையில், "எங்கள் இருவரின் குடும்பம் பற்றி ஒருவருக்கொருவர் நன்றாகத் தெரியும். மணப்பெண் படித்தவர், இனிமையானவர். அவர்களது குடும்பமும் நல்ல குடும்பம். திருமணத்தை எப்போது வைப்பது என்பது குறித்து தான் நாங்கள் யோசனை செய்து வருகிறோம். அடுத்தடுத்த தொடர்கள் இருப்பதால், புவனேஷ் மிகவும் பிஸியாக இருக்கிறார். ஆனால், வரும் மாதங்களில் எப்படியும் 10 நாட்களை சேகரித்து திருமணத்தை நடத்திவிடுவோம். அதற்கான ஏற்பாடுகளை செய்வோம்.

மேலும் அவர் கூறிய போது, "மிக விரைவில் தேதியை முடிவு செய்தபின், மீரட்டில் உள்ள ஏதேனும் ஒரு அரங்கத்தை பதிவு செய்வோம். ஒருவேளை, மீரட்டில் சரியாக அமையாவிடில், டெல்லியில் திருமணம் நடத்துவது பற்றியும் யோசித்து இருக்கிறோம். இது மிகவும் அருமையான தருணம். அனைவரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். இதனால், இந்திய அணியின் அனைத்து வீரர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்க முடிவு செய்துள்ளோம். அனைவரும் நிச்சயம் வருவார்கள் என நம்புகிறோம்" என்றார்.

புவனேஷ் குமார் தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான தொடரில் விளையாடி வருகிறார். நாளை(அக்.7) இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி ராஞ்சியில் தொடங்குகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிராக நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் புவனேஷ் அறிமுகமானார். 27 வயதான புவனேஷ் இதுவரை 80 ஒருநாள் விக்கெட்டுகளும், 17 டி20 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸி., அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்துவீசி புவனேஷ் குமார் அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment