ச. மார்ட்டின் ஜெயராஜ்
சென்னையைச் சேர்ந்த விளையாட்டு புகைப்படக் கலைஞரான புகழ் முருகன் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், செஸ், ஹாக்கி, வாலிபால், கபடி என பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று புகைப்படம் எடுத்துள்ளார். களத்தில் வீரர், வீராங்கனைகளின் அசைவுகளை கச்சிதமாக 'கிளிக்' செய்து, அந்த அற்புத தருணங்களை நம் கண்முன் நிறுத்தி வருகிறார். நாம் வழக்கமாக பார்க்கும் கேமரா லென்ஸ்களை கலைக்கண்ணோட்டத்தோடு பார்த்து, நீங்கா நினைவுகளாக மாற்றும் புகைப்படங்களை பிடிக்கிறார்.
புகைப்படத் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அவர், தனது இந்த திறனை இளம் தலைமுறையினருக்கு கடத்த முயற்சியில் பள்ளி மாணவர்களுக்கு கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகளை அவ்வப்போது நடத்தி வருகிறார். புகைப்படத் துறை குறித்து அறியாத எளிய மக்களுக்கும் இதனை கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற உன்னத முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
அவ்வகையில், புகழ் முருகனின் முயற்சியில் சிறிய பகுதியாக, கடந்தாண்டு செப்டம்பரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அரங்கேறிய 'சென்னை ஓபன்' டபிள்யூ.டி.ஏ. 250 (WTA 250) டென்னிஸ் போட்டியில் கலந்து வீராங்கனைகளின் உணர்ச்சிகரமான தருணங்களை படம் பிடித்தார். அந்த புகைப்படங்களை புத்தக வடிவுக்கு மாற்றி 'போட்டோ புக்' ஆக வெளியிட்டு இருக்கிறார்.
தமிழக அரசு ஆதரவுடன் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் நடத்திய சென்னை ஓபன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 வீராங்கனைகளும் கலந்துகொண்டனர். ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீரங்கனை லிண்டா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இரட்டையர் பிரிவில் கனடாவின் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி-லுசா ஸ்டெபானி இணையை சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைகளின் புகைப்படங்களை மட்டுமல்லாது, போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொரு வீராங்கனையையும் தனது கேமராவில் படம் பிடித்திருக்கிறார் புகழ் முருகன். அவர்களது பின்னணியையும் அவர் இந்தப் புத்தகத்தில் சுருக்கமாக விவரிக்கிறார். இந்த புத்தகத்தில் இருந்து விளையாட்டு புகைப்படங்கள் எப்படி எடுக்கப்பட வேண்டும், எந்த தருணத்தில் படங்கள் கிளிக் செய்யப்பட வேண்டும், வீரர், வீராங்கனைகளின் உணர்ச்சிகரமான தருணங்களை எப்படி கையாண்டு புகைப்படங்களை எடுக்கலாம் என்பதை அறியலாம்.
இந்த புத்தகத்தின் விலை: ரூ.499. ஆன்லைனில் அமேசான் இணைய பக்கத்திலும் வாங்கிக் கொள்ளலாம். 91762 71643 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம்.
அமேசான் இணைய பக்க லிங்க்: https://www.amazon.in/dp/B0C942CFKP/ref=sr_1_1?crid=2STFPQ71P5WEG&keywords=Tennis+in+slow+motion&qid=1687578229&sprefix=tennis+in+slow+motio%2Caps%2C441&sr=8-1
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.