Advertisment

4 ஸ்பின்னர்களை தயார் படுத்தும் இந்தியா: நாக்பூர் பிட்ச் யாருக்கு சாதகம்?

ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடிய அவர் தனது முதல் ஆட்டத்தின் ஒரு இன்னிங்சில் மட்டும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

author-image
WebDesk
Feb 07, 2023 13:45 IST
New Update
Border-Gavaskar Trophy: India could field four spinners in Nagpur Tamil News

Ashwin, Axar, Jadeja and Kuldeep

Border-Gavaskar Trophy, Nagpur test Tamil News: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும். இதனால், இந்திய அணியின் வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

Advertisment

அவ்வகையில், இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முந்தைய சமீபத்திய மாற்றத்தில், முதல் போட்டிக்கு இந்தியா இறுதியாக நாக்பூரில் உள்ள ரேங்க் டர்னர் பிட்சை தேர்வு செய்துள்ளது. அதனால், அதற்கு ஏற்ப ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்களை இந்தியா களமிறக்கவும் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசியுள்ள நம்பத்தகுந்த ஒருவர், "எங்கள் நன்மையை அதிகரிக்கவும், டர்னர்களை தயார் செய்யவும் நாங்கள் விரும்புகிறோம். சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களின் மிகப்பெரிய பலம். அவர்களுக்கு பந்துவீசுவதற்கும் விக்கெட்டுகளைப் பெறுவதற்கும் சிறந்த சூழ்நிலையை நாங்கள் வழங்க வேண்டும்.

“நிச்சயமாக, போட்டியின் முந்திய நாளிலோ அல்லது காலையில் விக்கெட்டை இறுதிப் பார்வையிட்ட பிறகு ஆடும் லெவனில் மாற்றம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். ஆனால் நான்கு ஸ்பின்னர்கள் நிச்சயமாக எங்கள் திட்டத்தில் உள்ளனர். ஏனெனில் எங்கள் அணியில் நான்கு தரமான ஸ்பின்னர்கள் உள்ளனர்.” என்று அவர் கூறியுள்ளார்.

இறுதி மாற்றம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், மேலே குறிப்பிட்ட 4 சுழற்பந்து வீச்சாளர்களும் ஆட்டத்திற்கு முன்னதாக கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டனர். பேட்டர்களைப் பொறுத்தவரை, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நாதன் லியானை எதிர்கொள்ள ரிவர்ஸ் ஸ்வீப் பயிற்சியில் ஈடுபட்டனர். இது இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை மேலும் நிரூபிக்கிறது.

ஏன் 4 சுழற்பந்து வீச்சாளர்கள்?

அஷ்வின் - ஜடேஜா

இப்போது ரெட் பால் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய ஆல்-ரவுண்டராக அஷ்வின் உள்ளார். அவரின் பேட்டிங் திறமை மற்றும் பந்து வீச்சில் புத்திசாலித்தனம் இந்தியாவுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. பொதுவாகவே அவர் ஒரு வழக்கமான விக்கெட்-டேக்கர் ஆவார். இந்திய அணிக்கு முக்கியமான தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவார்.

முழங்கால் காயத்தில் இருந்து திரும்பியுள்ள ஆல்-ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, எதிரணிக்கு குடைச்சல் தரும் வீரராக இருப்பார். ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடிய அவர் தனது முதல் ஆட்டத்தின் ஒரு இன்னிங்சில் மட்டும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பார்ட்னர்ஷிப்களை உடைப்பது மற்றும் பெயர்ந்து அல்லது உடைந்து இருக்கும் ஆடுகளத்தில் பந்தை சுழற்றுவது போன்ற ஜடேஜாவின் வித்தைகள் இந்தியாவுக்கு மற்றொரு கூடுதல் ஊக்கமாக இருக்கும்.

அக்சர் படேல் - குல்தீப்

ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய அடி கொடுக்க அடுத்த வரிசையில் இருக்கும் ஜோடியாக அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளனர். அக்சர் பந்தை நன்றாக விரட்டப்பவர் மட்டுமல்ல, மெதுவான இந்திய ஆடுகளங்களில் பந்தை டர்ன் செய்யும் திறமையும் கொண்டவர். நாக்பூர் ஆடுகளம் திருப்பத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய அணியினர் அக்சரை சமாளிப்பது கடினமான நேரத்தை எதிர்கொள்ளும்.

மறுபுறம் குல்தீப் யாதவ் தாமதமாக பரபரப்பான ஃபார்மில் உள்ளார். வங்கதேச சுற்றுப்பயணத்தில் சிறிது நேரத்திற்கு முன்பு அவர் இந்திய அணிக்காக டெஸ்டில் இடம்பெற்றார். சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்டில் அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். தனித்துவமான சுழல் திறன்களுடன் ஆயுதம் ஏந்திய குல்தீப், ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் இந்தியாவின் 4வது ஸ்பின்னராக இருப்பார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா: நாக்பூர் பிட்ச் எப்படி?

நாக்பூரில் உள்ள ஆடுகளம் பச்சை நிறமாக இருக்கும் என்று முதலில் புரிந்து கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஜடேஜா மற்றும் அஷ்வின் இருவரும் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள். இருப்பினும், சமீபத்திய அறிக்கைகள், ரேங்க் டர்னரை வழங்க பச்சை நிறத்தின் மேல் பகுதி துண்டிக்கப்படும் என்று கூறுகிறது. அதாவது ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 4 சிறப்பு சுழற்பந்து வீச்சாளர்களை இந்தியா தேர்வு செய்யும்.

நாக்பூரின் சிவப்பு மண் ஆடுகளத்தில், ஒரு மூர்க்கமான டர்னர் தோன்றாத வரை முதல் மூன்று நாட்களுக்கு பேட்டிங் சிறப்பாக இருக்கும். அது அழுக்கான ட்ராக் இல்லை என்றாலும், அணியின் வேண்டுகோளின்படி, முதல் நாளிலிருந்தே பந்து திரும்பத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

2015ஆம் ஆண்டு நாக்பூரில் 20 தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளும் சுழற்பந்து வீச்சால் கைப்பற்றப்பட்டன. 2017ல் இலங்கைக்கு எதிரான சமீபத்திய டெஸ்டில், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 8 மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

#India Vs Australia #Sports #Indian Cricket Team #Indian Cricket #Ravindra Jadeja #Ravichandran Ashwin #Axar Patel #Kuldeep Yadav
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment