Advertisment

கருண் நாயர் நீக்கம் ஏன்? கேப்டன் விராட் கோலி பதில்

அதில் உண்மை இல்லை. அனைத்து முடிவுகளையும் ஒரே இடத்தில் எடுக்கப்படுவதில்லை என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கருண் நாயர் குறித்து கேப்டன் கோலி

கருண் நாயர் குறித்து கேப்டன் கோலி

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் அக்டோபர் 4 முதல் 9 வரை நடைபெறுகிறது. 2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத் நகரில் அக்டோபர் 12 முதல் 16 வரை நடைபெறுகிறது.

Advertisment

இதில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ப்ரித்வி ஷா, சத்தேஸ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (வி.கீ), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹம்மத் ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துள் தாகுர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கருண் நாயர் நீக்கம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், வீரர்களை தேர்வு செய்வது என்னுடைய வேலை இல்லை என பதிலளித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "வீரர்கள் தேர்வு தொடர்பான முடிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் எடுக்கப்படுவதாக நினைத்து மக்கள் குழம்புகின்றனர். ஆனால், அதில் உண்மை இல்லை. அனைத்து முடிவுகளையும் ஒரே இடத்தில் எடுக்கப்படுவதில்லை என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், எல்லாவற்றையும் கூட்டாக சேர்ந்து முடிவு செய்வதில்லை என்பதையும் மக்கள் உணர வேண்டும்.

கருண் நாயர் நீக்கம் தொடர்பாக தேர்வாளர்கள் ஏற்கனவே பதிலளித்துவிட்டனர். எனவே, அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, வீரர்களை தேர்வு செய்வதும் என்னுடைய வேலை இல்லை என தெரிவித்தார்.

அடுத்ததாக ப்ரித்வி ஷா உள்ளிட்ட இளம் வீரர்களின் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அணியின் டாப் ஆர்டரில் பல மாற்றங்களை செய்துள்ளோம். புதிய வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி, அணியில் அவர்கள் களமிறங்கும் இடத்தில் வீரர்கள் வசதியாக உணரவும், அவர்களின் ஆட்டத்தில் அவர்கள் நம்பிக்கை கொள்ளவும் நாங்கள் வழிவகை செய்ய முயற்சிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Virat Kohli India Vs West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment