Advertisment

மேற்கு இந்திய தீவு வீரர் மகளுக்கு இந்திய மைதானத்தின் பெயர்... அசத்தல் பின்னணி!

“REMEMBER THE NAME Eden Rose Brathwaite” Carlos Brathwaite captioned the picture Tamil News: வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் கார்லோஸ் பிராத்வைட், ஈடன் கார்டன் மைதானத்தை நினைவுகூரும் விதமாக தனது மகளுக்கு "ஈடன் ரோஸ் பிராத்வைட்" என்று பெயர் சூட்டியுள்ளார்.

author-image
Martin Jeyaraj
New Update
Carlos Brathwaite blessed with baby girl and names her as Eden Rose

Carlos Brathwaite Tamil News: 2016ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அரங்கேறியது. இதில் டெல்லியில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதேபோல், மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த மற்றொரு அரையிறுதியில் இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Advertisment
publive-image

இதன்படி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், மார்லன் சாமுவேல்ஸ் (85), டுவைன் பிராவோ (25) ஆகிய வீரர்களைத் தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறி இருந்தனர். இறுதி ஓவர்களில் களத்தில் மார்லன் சாமுவேல்ஸ் - கார்லோஸ் பிராத்வைட் ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்ய அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்ட போது, கடைசி ஓவரை இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் வீசினார். அவரின் முதல் பந்தை எதிர்கொண்ட கார்லோஸ் பிராத்வைட் லெக் சைடில் சிக்ஸர் பறக்க விட்டார். பின்னர் வீசப்பட்ட 2 பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்க விட்டு ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார்.

publive-image

இப்போது அந்த அணியின் வெற்றிக்கு 3 பந்துகளில் 1 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. பந்தை ஸ்லிப்பில் தட்டி ஒரு ரன் எடுக்க மறுத்த பிராத்வைட், மீண்டும் ஒரு சிக்ஸர் பறக்க விட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். அவரின் இந்த 4 சிக்ஸர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது முறையாக டி20 உலகக் கோப்பை வெல்ல உதவியது.

publive-image
கார்லோஸ் பிராத்வைட்

அது முதல் கார்லோஸ் பிராத்வைட் என்றாலே, ஈடன் கார்டனில் 4 சிக்ஸர்களை பறக்க விட்டது தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். அத்தைய மாபெரும் வீரருக்கு கடந்த ஞாயிற்று கிழமை (பிப்ரவரி 6ம் தேதி) பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிராத்வைட் பகிர்ந்துள்ளார்.

மேலும், ஈடன் கார்டன் மைதானத்தை நினைவுகூரும் விதமாக தனது மகளுக்கு "ஈடன் ரோஸ் பிராத்வைட்" என்று பெயர் சூட்டியுள்ளார். தற்போது அவருக்கு கிரிக்கெட் ரசிகர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

"Remember the name Carlos Brathwaite”

publive-image
இயன் பிஷப்

2016 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வர்ணனையாளராக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப், கார்லோஸ் பிராத்வைட் வரிசையாக 4 சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்த போது, "கார்லோஸ் பிராத்வைட் என்கிற பெயரை நினைவில் வையுங்கள்" "Remember the name Carlos Brathwaite” என்று கூறினார். அவர் தனது வர்ணனை பாணியில் அவ்வாறு கூறியது மிகவும் பிரபலமானது.

இந்நிலையில், கார்லோஸ் பிராத்வைட் தனது இன்ஸ்டா பதிவில் “ஈடன் ரோஸ் பிராத்வைட் என்ற பெயரை நினைவில் வையுங்கள்" "REMEMBER THE NAME Eden Rose Brathwaite" என்று குறிப்பிட்டுள்ளார். பிராத்வைட்டின் இந்த பதிவு கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு, சமூக வலைதள பக்கங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த பதிவு…

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket T20 Worldcup West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment