இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் சாம்பியன்ஸ் லீக் தொடர் இன்று தொடங்குகிறது. தொடரை நடத்தும் நாடான இங்கிலாந்து, வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையே நடந்த கடைசி 7 ஒருநாள் போட்டிகளில், வங்கதேசம் 4 போட்டிகளில் வென்றுள்ளது. இதனால், இப்போட்டியை மிகுந்த நம்பிக்கையுடன் வங்கதேசம் எதிர்கொள்ளவிருக்கிறது.
அதேசமயம், இங்கிலாந்தை பொறுத்தவரை, இன்று போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் 8 போட்டிகளை அந்த அணி வென்றுள்ளது. குறிப்பாக, இதே மைதானத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து வென்றது.
இருப்பினும், தற்போது வங்கதேசம் மிகவும் பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது. உலகின் எந்த அணிகளையும் தங்களால் வீழ்த்த முடியும் என்று அந்த அணி நிரூபித்து வருகிறது. எனவே, இன்றைய தொடக்க போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கதேசம்:
மஷ்ரஃபே மோர்தசா(கேப்டன்), தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், இம்ருல் கயஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், மகமதுல்லா, ஷபீர் ரஹ்மான், மொஸாதக் ஹொசைன், மெஹந்தி ஹாசன், சன்சாமுல் இஸ்லாம், முஷ்பிகுர் ரஹீம், தஸ்கின் அஹமது, ரூபல் ஹொசைன், ஷபிபுல் இஸ்லாம்.
இங்கிலாந்து:
இயான் மார்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லயாம் பிளங்கட், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட்.