சாம்பியன்ஸ் டிராஃபி…. வீரர்கள் அறிவிப்பு!

ஏற்கனவே வீரர்களின் 6 மாத ஊதியத்தை பிசிசிஐ தராமல் பாக்கி வைத்திருக்கும் நிலையில், இதுவரை சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கவில்லை.

இந்திய அணி வீரர்கள்-னு நினைச்சீங்களா….? அதான் இல்ல… ஏற்கனவே வீரர்களின் 6 மாத ஊதியத்தை பிசிசிஐ தராமல் பாக்கி வைத்திருக்கும் நிலையில், இதுவரை சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கவில்லை. வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி, 18-ஆம் தேதி வரை, இத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், மற்ற 7 அணிகள் தங்கள் வீரர்களின் பெயர்களை அறிவித்துவிட்டது. அதுகுறித்து இங்கே பார்ப்போம்.

ஆஸ்திரேலியா:

ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், க்ளென் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ், ஜான் ஹாஸ்டிங்ஸ், ஜாஸ் ஹாஸில்வுட், டிராவிஸ் ஹெட், மோசஸ் ஹென்றிக்ஸ், கிறிஸ் லின், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்சல் ஸ்டார்க், மார்க் ஸ்டாய்னிஸ், மாத்யூ வேட், ஆடம் ஜம்பா.

அதேசமயம், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஜேம்ஸ் ஃபால்க்னர் ஆகியோரை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கழற்றிவிட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா:

ஏ.பி.டிவில்லியர்ஸ் (கேப்டன்), ஹாஷிம் ஆம்லா, குயின்டன் டீ காக், பாப் டூ பிளசிஸ், ஜே பி டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னல், ஆண்டிலே பெலுக்வாயோ, ககிஸோ ரபாடா, இம்ரான் தாகீர், டுவைன் ப்ரோடோரியஸ், கேஷவ் மகராஜ், பெஹார்டீன், மோர்னே மார்கல்.

டேல் ஸ்டெய்ன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து:

இயான் மார்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லயாம் பிளங்கட், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட்.

நியூசிலாந்து:

கேன் வில்லியம்சன்(கேப்டன்), கோரே ஆண்டர்சன், ட்ரெண்ட் போல்ட், நெயில் ப்ரூம், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், டாம் லாதம், மிச்செல் மெக்லாகன், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், ஜிதன் படேல், லுக் ரோஞ்சி, மிச்செல் சான்டனர், டிம் சவுதி, ராஸ் டெய்லர்.

இஷ் சோதி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசம்:

மஷ்ரஃபே மோர்தசா(கேப்டன்), தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், இம்ருல் கயஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், மகமதுல்லா, ஷபீர் ரஹ்மான், மொஸாதக் ஹொசைன், மெஹந்தி ஹாசன், சன்சாமுல் இஸ்லாம், முஷ்பிகுர் ரஹீம், தஸ்கின் அஹமது, ரூபல் ஹொசைன், ஷபிபுல் இஸ்லாம்.

இலங்கை:

ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா, குசால் பெரேரா, குஷால் மெண்டிஸ், சமாரா கபுகேதரா, அசேலா குணரத்னே, தினேஷ் சந்திமால், லசித் மலிங்கா, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப், நுவான் குலசேகரா, திசேரா பெரேரா, லக்ஷன் சடங்கன், சீக்குக பிரசன்னா.

பாகிஸ்தான்:

சர்ப்ராஸ் அஹமது(கேப்டன்), அசார் அலி, அஹமது சேஷாத், முகமது ஹபீஸ், பாபர் ஆஸம், சோயப் மாலிக்,உமர் அக்மல், பஹார் ஜமான், இமாத் வாசிம், ஹசன் அலி, பஹிம் அஷ்ரப், வஹாப் ரியாஸ், முகமது அமீர், ஜுனைத் கான், ஷதாப் கான்.

கம்ரான் அக்மல் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Champions trophy teams players list

Next Story
பிசிசிஐ-யில் நடப்பது என்ன? 6 மாதமாக வீரர்களுக்கு ஊதியம் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com