Advertisment

குமரி டூ சென்னை… விளம்பர பயணத்தை ஆசிய ஹாக்கி கோப்பை!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசு 'கோப்பை' குமரி முதல் சென்னை வரையிலான அதன் விளம்பர பயணத்தை தொடங்கியது.

author-image
WebDesk
New Update
Chennai Asian Champions Hockey: Trophy tour started Tamil News

16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி அரங்கேறுகிறது.

த.இ.தாகூர்.

Advertisment

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்டு 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசு 'கோப்பை' குமரி முதல் சென்னை வரையிலான அதன் விளம்பர பயணத்தை தொடங்கியது

கன்னியாகுமரி முக்கடல் பகுதியில் நடை பெற்ற விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வாழ்த்தி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மற்றும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்கள் வழியாக பயணப்படும் இந்த 'கோப்பை' இம்மாதம் இறுதியில் (ஜூலை 30) தலைநகர் சென்னையை சென்றடைகிறது.

16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி அரங்கேறுவது குறிபிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Sports Kanyakumari Hockey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment