சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 'நியூ இயர் ரிசல்யூஷன்' என்னவாக இருக்கும்?

இந்த புத்தாண்டில் நீங்க என்ன ரிசல்யூஷன் எடுத்து இருக்கீங்க-னு? கடந்த ரெண்டு நாளா, நம்மள பார்க்குறவங்க எல்லாம் கேட்குறாங்க

இந்த புத்தாண்டில் நீங்க என்ன ரிசல்யூஷன் எடுத்து இருக்கீங்க-னு? கடந்த ரெண்டு நாளா, நம்மள பார்க்குறவங்க எல்லாம் கேட்குறாங்க. ஆனா, என்ன பதில் சொல்றது-னு தான் தெரியல. பலரும் ரிசல்யூஷன்னா என்னன்னே தெரியாமல், ஒன்னும் இல்ல பாஸ் என்று பொத்தாம் பொதுவாக பதில் சொல்றதையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால், நம்மில் பலரும் புத்தாண்டு சபதம் என எதுவும் எடுப்பதில்லை என்பதே உண்மை. அப்படியே எடுத்திருப்பதாய் சொன்னாலும், அது அடுத்த ஞாயிறை தாண்டாது. எப்படி, ஒரு இன்டர்வியூவிற்கு 50 பேர் போனா, 2 பேர் மட்டும் இறுதியா தேறுகிறார்களா, அதுபோலத் தான் சிலர் மட்டுமே தங்களது சபதத்தை கன்டினியூ செய்கின்றனர்.

அது ஒருபக்கம் இருக்கட்டும்.. இந்தாண்டு மீண்டும் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு குட்டி கற்பனை ரிசல்யூஷன் இதோ,

தலைவர் அரசியலுக்கு வந்துட்டார், தல தோனியை மீண்டும் டீமுக்கு கொண்டு வரோம்… தளபதி ரெய்னாவை கொண்டு வரோம். ‘தமிழ்மகன்’ அஷ்வினையும் கட்டாயம் கொண்டு வரோம்.  ‘போர் வரும்போது பாத்துக்கலாம்’-னு தலைவர் சொன்னார். அது ‘அரசியல் போர்’… நம்மளது ‘ஐபிஎல்’ போர். இப்போ போரும் வந்தாச்சு… நாம களத்திற்கும் வந்தாச்சு.

டெல்லியை தெறிக்க விடுறோம், பஞ்சாபை பறக்க விடுறோம், ராஜஸ்தான் ராயல்சை காய விடுறோம், ஹைதராபாத்தை அதிர வைக்குறோம், கொல்கத்தாவை கொல்லைக்கு அனுப்புறோம், பெங்களூருவை பொங்கல் வைக்குறோம்… ஆனா, மும்பைய மட்டும் காணாம ஆக்குறோம்! இதுதான் பாய்ஸ் நம்ம ரிசல்யூஷன்.

நாங்க மீண்டும் வந்துட்டோம் மும்பை… அன்பை மட்டும் எங்கள்ட்ட இருந்து எதிர்பார்க்காதீங்க!.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close