இரண்டு ஆண்டுகள் கழித்து அரிய காட்சி! பயிற்சியில் மஞ்சள் ஜெர்ஸி! #IPL2018

விளம்பரத்திற்காகவும், பயிற்சிக்காகவும் 'மாநகரம்' வந்திருந்த சிஎஸ்கே வீரர்களின் ஸ்பெஷல் புகைப்படங்கள் மற்றும் வீடியோ

புதிய வீரர்களின் வருகையால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகம் மாறியிருந்தாலும், யுகம் ஆனாலும், நீ தான் மாஸ் என்று சொல்ல வைத்திருக்கிறது மஞ்சள் ஜெர்ஸி. ஆம்! இரண்டு ஆண்டு தடைக்குப் பின்னர் மீண்டும் களத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ். கேப்டன் தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் பலரும் தங்களது பயிற்சியை தற்போதே தொடங்கிவிட்டனர். சில வீரர்கள் மட்டுமே மிஸ்ஸிங். அவர்களும் கூடிய விரைவில் அணியுடன் இணைய உள்ளார்கள்.

இதில், கூடுதல் சுவாரஸ்யம் என்னவெனில், தோனி பயிற்சியாளராக மாறி, இளம் வீரர்களுக்கு கோச்சிங் கொடுத்ததை காண முடிந்தது. இது எப்போது நடக்கும் நிகழ்வு தான். ஆனால், இம்முறை ஒரு புரஃபஷ்னல் கோச்சை போல தல சொல்லிக் கொடுத்தது வேற லெவல் தோனி….

அதுமட்டுமின்றி, தல ஒரு சிக்ஸரை தூக்கினார் பாருங்க… போதும்யா… இது போதும்யா….

சென்னை அணியின் விளம்பரத்திற்காகவும், பயிற்சிக்காகவும் ‘மாநகரம்’ வந்திருந்த சிஎஸ்கே வீரர்களின் ஸ்பெஷல் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ,

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close